நவகிரகங்களின் மகாதசை காலங்கள் எவ்வளவு நாள் நீடிக்கும்? சனி மகாதசையின் அம்சங்கள்!

Navagraha And Mahadasa Period: ஒரு கிரகத்தின் மகாதசைக் காலம் என்பது ஜோதிடத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு மகாதசையும் பல கிரக காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 2, 2024, 11:18 AM IST
  • கிரகத்தின் மகாதசைக் காலம்
  • ஜோதிடத்தில் முக்கியமான அம்சம்
  • பல கிரக காலங்களாக பிரிக்கப்பட்டுள்ள மகாதசை
நவகிரகங்களின் மகாதசை காலங்கள் எவ்வளவு நாள் நீடிக்கும்? சனி மகாதசையின் அம்சங்கள்! title=

நம்முடைய ஒவ்வொரு செயலும் நவகிரகங்களே காரணம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்கள், உலகில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையவை. கிரகங்களின் சஞ்சாரத்தால் வானிலை மாறுதல்கள் முதல் மனித வாழ்க்கையில் நிகழ்வுகள் என அனைத்தும் நிகழ்கின்றன. 

வானில் உள்ள கோள்களின் அமைப்புப்படி நவகிரகங்களின் அமைப்புக்கேற்ப மனிதர்களின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு கிரகத்தின் மகாதசைக் காலம் என்பது குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக உள்ளது. அதிலும், ஒவ்வொரு மகாதசையும் அந்தர்-தசா அல்லது புக்தி, பிரதி-அந்தராஷா, சூக்ஷ்ம தசா மற்றும் பிரான் தசா என கிரக காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை  விகிதாசார நீளத்துடன் கிரகத்தின் போக்கை இயக்குகின்றன. 

ஒவ்வொரு கிரகத்தின் மகாதசை எத்தனை ஆண்டு காலம் நீடிக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

சூரியன்: சூரிய மகாதசை 6 ஆண்டுகள் வரை நீடிக்கும். ஒளிமயமான மற்றும் அதிகாரத்துவத்தை நிர்ணயிக்கும் சூரியனின் மகாதசை, ஒருவரின் தலைமைத்துவத்தை நிர்ணயிக்கிறது. ஒருவரின் நம்பிக்கை, லட்சியம் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை சூரிய மகாதசை நிர்ணயிக்கும்.  

மேலும் படிக்க | ஓம் எனும் பிரணவ மந்திரம்! பிரபஞ்சத்தின் மூலாதார மந்திரத்தின் ஆன்மீகச் சிறப்பு!

சந்திரன்: சந்திர மகாதசை 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். சந்திர மகாதசை காலக்கட்டத்தில், சந்திரனின் ஆதிக்கத்தால், உணர்ச்சி சம்பந்தப்பட்ட மாற்றங்களை ஒருவர் எதிர்கொள்ள வேண்டும். சந்திர மகாதசையில், உணர்திறன், உள்ளுணர்வுகளை வளர்ப்பது மற்றும் உள்ளுணர்வு திறன்கள் உறுதியாகும்.  உறவுகள், இல்லற வாழ்க்கை, மன அமைதி ஆகியவற்றுக்கு காரகரான சந்திரனின் இந்த மகாதசை, உணர்ச்சிகளை முடிவு செய்யும்.  

செவ்வாய்: செவ்வாய் மகாதசை 7 ஆண்டுகள் வரை நீடிக்கும். செவ்வாய்  கிரகம், ஒருவரின் சுறுசுறுப்பை நிர்ணயிக்கும். செவ்வாயின் மகாதசையில், செயல், தைரியம் மற்றும் உறுதியான எண்ணங்கள் உருவாகும். அதேபோல மோதல்கள், மனக்கிளர்ச்சி மற்றும் சவால்களையும் கொடுக்கும் செவ்வாய் மகாதசை ஒருவரின் வலிமையை நிர்ணயம் செய்யும். 

புதன்: 17 ஆண்டுகள் வரை நீடிக்கும் புதன் மகாதசை காலகட்டத்தில் புத்திகூர்மை, மனம் பக்குவமடைவது என புத்தி மற்றும் அறிவு சம்பந்தப்பட்ட ஆளுமை ஏற்படும். தகவல் தொடர்பு திறன்கள் மேம்படும். பல விஷயங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் புதன் மகாதசை, கலை மற்றும் கற்றலுக்கான ஆர்வத்தை அதிகரிக்கும்.

வியாழன்: குரு மகாதசை 16 ஆண்டுகள் வரை நீடிக்கும். ஞானமும், ஆன்மீக வளர்ச்சியும் குரு மகாதசையின் முக்கியமான அம்சங்களாகும். தாராள மனப்பான்மை மற்றும் தார்மீகத்தில் ஆழ்ந்த பற்று என ஒருவரின் தரத்தை உயர்த்தும் காலமாக குரு மகாதசை இருக்கும். 

மேலும் படிக்க | சேரும் இடம் பொருத்து செல்வத்தை சேர்த்து வழங்கும் ராகு பகவான்! போகக் காரகர் ராகு!

சுக்கிரன்: சுக்ர மகாதசை காலம் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும். அழகு, காதல், ஆடம்பரம், கலை வெளிப்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் இந்த மகாதசை, இன்பத்தை நோக்கிய தேடலை ஊக்குவிக்கும். அதுமட்டுமல்ல, படைப்பாற்றல், உறவுகளில் இன்பம், செல்வ சேர்க்கை, இன்பம் ஆகியவற்றுக்கான காலகட்டமாக இருக்கும். 

சனி: சனி மகாதசை 19 ஆண்டுகள் வரை நீடிக்கும். சனி மகாதசையின் போது படிப்பினைகள் கிடைக்கும். ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் கர்ம வினைகள் தீர்ப்பது ஆகியவை சனி மகாதசையின் அம்சங்களாக உள்ளன. இந்த சனி மகாதசையில், மனமுதிர்ச்சி, கடின உழைப்பு மற்றும் துன்பங்களை எதிர்கொள்வது, பக்குவமடைவது என பல் முக்கியமான விஷயங்கல் நடந்தேறும். 

ராகு:  ராகு மகாதசை 18 ஆண்டுகள் வரை நீடிக்கும். சாயா கிரகமான ராகு மனதில் ஆசைகளையும் விருப்பத்தையும் உருவாக்கும். ராகு மகாதசை காலத்தில் மனதில் லட்சியம் உருவாகும், உலக ஆசைகள் அதிகமாகும்.

கேது: கேதுவின் மகாதசை 7 ​​ஆண்டுகள் நீடிக்கும்.  இந்த நிழல் கிரகம் கர்ம கணக்கீடுகளை வெளிப்படுத்தும். கேது மகாதசையில் ஆன்மீக தேடல், பற்றற்ற தன்மை மற்றும் மன பக்குவம் என ஞானத்தை நோக்கிய வழிகாட்டல் கிடைக்கும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் எந்த லக்கினத்தில் இருந்தால் நன்மை? எந்த லக்கினத்தில் இருந்தால் ஆபத்து?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News