எல்லா திசைகளில் இருந்தும் பணம் மழையாய் பொழிய வந்துவிட்டது உபயாச்சாரி ராஜயோகம்!

Ubhayachari Rajyog 2024 Tamil: சூரியனுக்கு இருபுறமும் கிரகங்கள் இருப்பதால் உபயாச்சாரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜ்ய யோகம் யாருக்கு உகந்தது?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 18, 2024, 12:06 AM IST
  • எட்டு திக்கில் இருந்தும் பணம் வந்து கொட்ட ஆரம்பித்துவிட்டதா?
  • சூரியன் கும்ப ராசிக்கு வந்ததால் ஏற்பட்ட யோகம்
  • உபயாச்சாரி ராஜயோகத்தின் சுபபலன்கள்
எல்லா திசைகளில் இருந்தும் பணம் மழையாய் பொழிய வந்துவிட்டது உபயாச்சாரி ராஜயோகம்! title=

ஜோதிடத்தின்படி கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கங்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கியமானவை. ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் சரியான திசையில் இருந்தால்,நல்ல பலன்களைப் பெறுவீர்கள் என்று கூறப்படுகிறது, ஆனால் உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனமாக இருந்தால், எல்லா வேலைகளும் தடைபடும். வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், கிரகங்கள் அவற்றின் இயக்கங்களை மாற்றிக்கொண்டே இருப்பதால், வாழ்க்கையில் துன்பங்கள் வருவதைப் போலவே நல்லதும் விரைவில் வந்துவிடுகிறது. தற்போது கிரகங்களின் மாற்றத்தால், உபயாச்சாரி ராஜயோகம் உருவாகி இருக்கிறது.

இந்த ராஜயோகமானது 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். கும்ப ராசியில் உள்ள சூரியன் உபயச்சாரி ராஜயோகத்தை உருவாக்கு இருக்கிறார், இதன் மூலம் சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம் ராசியினர் சுபபலன்களை பெறுவார்கள்.

உபயாச்சாரி யோகத்தின் சுபபலன்களைப் பெறும் ராசிகள்

சிம்மம்:  வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும், தற்போது சிம்ம ராசிக்காரர்களுக்கு உபயச்சாரி யோகத்தால் நற்பலன்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல்களில் ஊக்கம் ஏற்படும். நிதி நிலை வலுவடையும், வாரக்கடன்கள் வந்து சேரும்.

மேலும் படிக்க | கல்வி அறிவுக்கு காரகர் புதன்! புதன் பெயர்ச்சியானால் என்ன? தீமைகளை குறைக்க இப்படி வழிபடலாம்!

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் ராஜயோகம் இது. மகர ராசிக்காரர்களுக்கு திடீரென பணம் வந்துசேரும். புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கும். செல்வாக்கு மிக்கவர்களின் உதவியால் எதிர்காலம் ஒளிமயமாகும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிலைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். வணிக பரிவர்த்தனைகளில் திருப்தி ஏற்படும். பெற்றோருடனான உறவு சீர்படும். மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். நேர்மறையான எண்ணத்துடன் செயல்படுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். தன்னம்பிக்கையால் எல்லாத் தடைகளையும் தாண்டி வெற்றி இலக்குகளை அடைவார்கள். எந்தவொரு முக்கியமான தொழில் முடிவைப் பற்றிய சந்தேகம், குழப்பம் அனைத்தும் தீர்ந்து, தீர்க்கமான முடிவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குபேர சிலையை தவறுதலா கூட இந்த திசையில் வைக்காதீங்க.. தரித்திரம் ஏற்படலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News