விநாயகர் சதுர்த்தி 2022: விக்னங்களை போக்கும் விநாயகர், கேட்ட வரம் தரும் கணபதி!!

Vinayaka Chaturthi 2022: தமிழகத்தில், கிட்டத்தட்ட அனைத்து தெருக்களிலும் ஒரு குட்டி பிள்ளையார் கோயிலை காணலாம். மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த தெய்வங்களில் விநாயகருக்கே முதலிடம்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 31, 2022, 08:34 AM IST
  • விக்னங்களை தீர்க்கும் விநாயகர் பக்தர்களின் வினை தீர்க்கும் கடவுளாக அருள் புரிகிறார்.
  • நம் நாட்டில் விநாயகருக்கு பல கோயில்கள் உள்ளன.
  • விநாயகர், ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் அவதரித்தார்.
விநாயகர் சதுர்த்தி 2022: விக்னங்களை போக்கும் விநாயகர், கேட்ட வரம் தரும் கணபதி!! title=

முழு முதற் கடவுள், விக்னங்களை தீர்க்கும் விநாயகர் பக்தர்களின் வினை தீர்க்கும் கடவுளாக அருள் புரிகிறார். அனைத்து வித பூஜைகளிலும் வழிபாடுகளிலும் விநாயகருக்கே முதலிடம். விநாயகர், பிள்ளையார், கணபதி என பல்வேறு திருநாமங்களால் வழிபடப்படும் விநாயகப் பெருமான் பக்தர்களின் குறை தீர்ப்பதில் குபேரனாக விளங்குபவர். விநாயகர், ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் அவதரித்தார். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியாக மிக விமரிசையாக கொண்டாடப்படுகின்ற்து.

நம் நாட்டில் விநாயகருக்கு பல கோயில்கள் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில், கிட்டத்தட்ட அனைத்து தெருக்களிலும் ஒரு குட்டி பிள்ளையார் கோயிலை காணலாம். மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த தெய்வங்களில் விநாயகருக்கே முதலிடம்!!

விநாயகர் சதுர்த்தியன்று நாம் விநாயகர் சிலை வாங்கி அந்த சிலைக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து பூஜை செய்வது வழக்கம். சிலர் மஞ்சளால் பிடிக்கப்பட்ட விநாயகருக்கும் பூஜை செய்வர். 

விநாயகர் துதி:

பின்வரும் விநாயகர் துதிகளை இந்நாளில் சொல்வது அதிகப்படியான நன்மையையும் பிள்ளையாரின் அருளையும் அள்ளித்தரும் என நம்பப்படுகின்றது.

வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி சமப்ரபா
நிர்விகம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா

மேலும் படிக்க | Vinayagar Chaturthi 2022: விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்ல கவிதைகள்! 

ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி
ஓம் விடலை விரும்பினாய் போற்றி
ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி
ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி
ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி
ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி
ஓம் பாவமறுப்பாய் போற்றி
ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி

கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே!

இவை தவிர  விநாயகர்  அகவலையும் இந்த திருநாளில் கண்டிப்பாக கூற வேண்டும்.

விநாயகருக்கு உகந்த நைவேத்தியம்:

விநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, சுண்டல், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். மேலும், அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ ஆகியவை கொண்டு பூஜை செய்யலாம். 

முழுமுதற் கடவுள்

ஐயன் சிவபெருமானுக்கும் அன்னை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்தவர் விநாயகர். அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களை ஏற்படுத்தும் யானைமுகன், தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்குவதாக கணேச புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம்  எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது. ஸ்ரீவைணவர்கள், விநாயகரைத் தும்பிக்கை ஆழ்வார் என்று அழைப்பார்கள்.  

மேலும் படிக்க | Ganesh Chaturthi: கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு; இது விநாயகரின் சதுர்த்தி திருநாள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News