மீனத்தில் குரு வக்ர பெயர்ச்சி; இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம்

Guru Planet Transit 2022: குரு பகவான் மீனத்தில் பிற்போக்கு நிலையில் உள்ளார். குரு பிற்போக்காக இருப்பதால் சில ராசிக்காரர்களை தொந்தரவு செய்யலாம், குருவை பலப்படுத்தும் வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்-

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 19, 2022, 08:34 AM IST
  • வியாழன் பிற்போக்கு நிலை
  • ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  • வியாபாரத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடலாம்
மீனத்தில் குரு வக்ர பெயர்ச்சி; இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம் title=

ஜோதிடத்தில் வியாழன் கிரகம் ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. இந்த கிரகம் கல்வி, திருமணம், செல்வம், செழிப்பு, அறிவு, வருமானம், நிர்வாகம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தற்போது வியாழன் மீனத்தில் வக்ர பெயர்ச்சி அடைவதால் இதை ஜோதிடத்தில் அசுபமாக கருதப்படுகிறது. இதனால் பண இழப்பையும் வயிறு சம்பந்தமான நோய்களையும் ஏற்படலாம். பஞ்சாங்கத்தின்படி, வியாழன் 29 ஜூலை 2022 முதல் மீனத்தில் வக்ரமானார். தற்போது 4 மாதங்களுக்கு அதாவது 24 நவம்பர் 2022 வரை பிற்போக்கு நிலையில் இந்த ராசியில் குரு இருக்கும். செல்வம் மற்றும் ஆரோக்கியத்தின் பார்வையில் இந்த ராசிக்காரர்களுக்கு வியாழனின் பிற்போக்கு சுபமாக கருதப்படாது. எனவே குரு பிற்போக்காக இருப்பதால் சில ராசிக்காரர்களை தொந்தரவு ஏற்படலாம், அந்த வகையில் குருவை பலப்படுத்தும் வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்-

மேஷம்: வியாழன் பிற்போக்கு நிலையில் இருக்கும் வரை, நீங்கள் ஆரோக்கியத்தின் அடிப்படையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வயிற்றில் கல் இருந்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இதனுடன் திருமண வாழ்விலும் சில பிரச்சனைகள் வரலாம். 

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்து ஓம் கிராம் க்ரிம் க்ரௌம் குர்வே நமஹ என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

கடகம்: வியாழன் பிற்போக்கு உங்கள் வேலையை தாமதப்படுத்தலாம். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகலாம். அதேபோல் முக்கியமான வேலையைச் செய்வதற்கு முன் மூத்தவர்களின் ஆலோசனையைப் பெறவும்.

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள்.

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடலாம், கூட்டுத் தொழிலில் ஈடுபட்டால் சிறப்பு கவனம் தேவை. அவசரப்பட்டு பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு உங்கள் சொந்த அறிவைப் புதுப்பித்துக் கொள்வது நல்லது. 

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று விஷ்ணு பகவானை வழிபடவும். பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்களுக்கு உதவுங்கள்.

மீனம்: வியாழன் மீனத்தில் பிற்போக்கு நிலையில் உள்ளது. வியாழன் உங்கள் ராசிக்கு அதிபதியும் கூட . இந்தக் காலகட்டத்தில் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். சோம்பலை கைவிடுங்கள் இல்லையெனில் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். வருமானத்தைப் பெருக்க அதிகப் போராட வேண்டியிருக்கும். 

பரிக்காரம்: வியாழக்கிழமை அன்று விரதம் இருந்தால் லாபம் உண்டாகும். 

வியாழனை வலுப்படுத்த ஜோதிட பரிகாரங்கள்

* வியாழன் பலவீனமாக இருப்பவர்கள் வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும். இந்த விரதத்தை 3, 9 அல்லது 16 வாரங்கள் செய்யலாம்.

* குருவை வலுப்படுத்த, ஓம் கிராம் க்ரிம் க்ரௌம் குர்வே நமஹ மந்திரத்தின் 3, 5 அல்லது 16 முறைகளில் உச்சரிக்கலாம்.

* குரு பலவீனமாக இருப்பவர்கள், கடலைமாவு, சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட லட்டுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* வியாழன் பலவீனமாக இருப்பவர்கள் புஷ்பராகம் அணிய வேண்டும். இதற்கு தகுதியான ஜோதிடரை அணுக வேண்டும்.

* உங்கள் பெற்றோர், குரு மற்றும் பெரியவர்களை மதிக்க வேண்டும். தூய்மையைக் கடைப்பிடிப்பதன் மூலமும், குருவுக்கு சேவை செய்வதன் மூலமும், வியாழன் கிரகம் நல்ல பலனை தரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News