டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சியால் பணத்தை அள்ளும் லக்கி ராசிக்காரர் நீங்களா?

Sun Transit December 2022: சூரியனின் தனுர் சங்கராந்தி 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சியால் பலனடையப் போகும் ராசிகள் இவை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 9, 2022, 06:33 AM IST
  • 2022 மார்கழி மாதம் யாருக்கு சாதகமாக இருக்கும்?
  • இந்த ஆண்டின் கடைசி சூரியப் பெயர்ச்சி
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு அருமையான காலம்
டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சியால் பணத்தை அள்ளும் லக்கி ராசிக்காரர் நீங்களா? title=

Sun Transit December 2022: கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலையான ஜோதிடம், நமது வாழ்க்கையை திட்டமிட்டு செயல்படுத்த உதவுகிறது. டிசம்பர் மாதம் 16ம் தேதி  சூரியன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். டிசம்பர் மாதத்தில் வேறு சில கிரகங்களும் நடைபெறுகிறது. இன்னும் சில நாட்களில் சூரியனின் சஞ்சாரம் சிலருக்கு பெரும் பணத்தை அளிக்கவிருக்கிறது. சூரியனின் இந்த தனுர் சங்கராந்தி 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். ஒரே இரவில் பணக்காரர் ஆகும் வாய்ப்புடைய சில ராசிகள் இவை. பொங்கல் வரையிலான ஒஉ மாதத்திற்கு நிறைய பணம் வந்து சேரும். வாழ்க்கையில் வெற்றியும் பெறுவார்கள்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலம், அவர்களுக்கு முன்னேற்றத்தையும் பணத்தையும் தரும். இதனுடன், திருமண வாழ்க்கைக்கும் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அதிக அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். பண வரத்து சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | கிரகக் கோளாறால் டிசம்பர் மாதம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

கன்னி: சூரியனின் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்களைத் தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து கானப்படும். சுகபோகங்கள் அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். மரியாதை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த நேரம் அதிக லாபத்தைத் தரும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரும். சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் பெரும் வெற்றியைத் தரும். தொழிலில் முன்னேற்றமும், வியாபாரத்தில் லாபமும் உண்டாகும். தேர்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தனுசு: தற்போது தனுசு ராசிக்குள் நுழையும் சூரியன், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்களைத் தருவார். தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன் தன்னம்பிக்கையை அதிகரிப்பார். உத்தியோகத்தில் அனைவரும் உங்களுக்கு மரியாதை தருவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | டிசம்பர் மாத பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள் இவை தான்!

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்; புத்தாண்டில் ‘இந்த’ ராசிகளுக்கு ராஜயோகம்!

மேலும் படிக்க | மாதங்களில் நான் மார்கழி! கண்ணனுக்கு பிடித்தமான 2022 மார்கழி மாத ராசி பலன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News