சூரியன் பெயர்ச்சி 2022: கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: செப்டம்பர் 17-க்கு பிறகு 4 ராசிக்காரர்களுக்கு பணமழை

செப்டம்பர் 17க்குப் பிறகு கன்னி ராசிக்கு சூரியன் செல்வதால், 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 16, 2022, 09:55 AM IST
  • நாளை இடமாறும் சூரியன்
  • கன்னி ராசிக்கு செல்கிறார்
  • 4 ராசிகளுக்கு ஜாக்பாட்
சூரியன் பெயர்ச்சி 2022: கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: செப்டம்பர் 17-க்கு பிறகு 4 ராசிக்காரர்களுக்கு பணமழை  title=

ஜோதிடத்தில் சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சூரியனின் பெயர்ச்சி பல ராசிகளை பாதிக்கும். நாளை அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்க உள்ளார். ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசி மாற்றத்தால் பல ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. சூரியனின் சஞ்சாரத்துடன், சில ராசிகளின் சுப காலம் துவங்க இருக்கிறது. சிலருக்கு துன்பம் ஏற்பட போகிறது. இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் அரசனான சூரியன், கன்னி ராசியில் நுழைவதால் நல்ல பலன் கிடைக்கப் போகிறது. மேஷ ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். பல நாட்களாக முடங்கியிருந்த பணிகளும் நிறைவடையும். இத்துடன் அலுவலகத்தில் மரியாதை கூடும். குடும்ப பிரச்சனைகளும் தீரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சிம்மம் 

கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வெற்றிகளைப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் உண்டு. சூரியனின் சஞ்சாரத்தால் எங்காவது சிக்கிய பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

சூரியனின் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதனுடன், புதிய வருமான ஆதாரங்களும் தொடங்கும். இந்தக் காலக்கட்டத்தில் ஏதேனும் ஒரு சொத்தில் முதலீடு செய்தால், அது மிகவும் லாபகரமாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரவேசிக்கும். தொழில், வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். பழைய நீதிமன்ற வழக்குகளில் நிம்மதி கிடைக்கும். இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுபகிருது ஆண்டின் புரட்டாசி மாத ராசிபலன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News