சூரிய ராசி பரிவர்த்தனை 2022: ஜூன் 15, புதன் கிழமை மதியம் 12:4 மணிக்கு, கிரகங்களின் அரசனான சூரியன், கன்னி லக்னத்தில், எதிரி கிரகமான சுக்கிரனின் ரிஷப ராசியிலிருந்து விலகி, புதன் அதிபதியான மிதுன ராசியில் நுழைகிறார். இங்கு அவர் ஜூலை 16 இரவு வரை தங்குவார்.
புதன் சங்கராந்தி மந்தாகினி என்று அழைக்கப்படுகிறது. அதில் மன்னர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். சங்கராந்தி புண்யகாலம் காலையில் இருந்து தொடங்குகிறது. சங்கராந்தியில் நீராடிவிட்டு, பித்ரு கர்மாக்களை செய்து தானம் செய்வதன் மூலம் சூரிய நாராயணன் அபரிமிதமான செல்வத்தையும், ஆரோக்கியமான உடலையும், சக்தியையும் அளிக்கிறார்.
மிதுன ராசியின் அதிபதியான புதன் சமமான நிலையில் உள்ளார். அதாவது இவர் சூரியனுக்கு நண்பனும் அல்ல, எதிரியும் அல்ல. இந்த ராசியில் மிருகசீரிஷம், திருவாதிரை மற்றும் புனர்வசு ஆகிய மூன்று ராசிகள் உள்ளன. மிருகசீரிஷத்தின் அதிபதியான செவ்வாயும், புனர்வசுவின் அதிபதியான பிரஹஸ்பதியும் சூரியனின் உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள். திருவாதிரையின் அதிபதியான ராகு, சூரியனுக்குப் பலமான எதிரி. ஜூன் 26 வரை சூரியன் செவ்வாயின் தாக்கத்தில் இருக்கும்.
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் ஏற்படும் பலன்களை தெரிந்து கொள்வோம்:
மேஷம், சிம்மம், கன்னி, மகர ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம்:
மேஷம், சிம்மம், கன்னி, மகர ராசிக்காரர்களுக்கு சூரியனின் மாற்றம் பல நல்ல பலன்களை அளிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் வந்துசேரும்.
வெளிநாடுகளில் உள்ளவர்களிடமிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளிநாட்டு பயணம் செல்லக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இந்த பயணங்களால் நல்ல ஆதாயம் ஏற்படும்.
சொந்த வாழ்க்கையிலும் இந்த காலத்தில் அனுகூலமான பல விஷயங்கள் நடக்கும். காதல் விவகாரங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவேறும்.
மேலும் படிக்க | இன்று சூரியன் பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்கள் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்
படைப்பாற்றல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். இவர்களது பணி பாராட்டப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.
நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். இந்த காலத்தில் உடல் ஆரோக்கியம் சீராகும்.
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இது லாபங்களை அள்ளித்தரும் காலமாக இருக்கும். புதிய பணிகள், நேர்காணல் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
ரிஷபம், மிதுனம், கடகம், துலாம் ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை தேவை:
ரிஷபம், மிதுனம், கடகம், துலாம் ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் வேலைகளில் தடைகள் ஏற்படலாம். பணிகள் நிறைவடையாமல் இழுபறி இருக்கக்கூடும்.
அலுவலகம் மற்றும் வீட்டில் உங்கள் நடத்தையால் மன உளைச்சல் வர வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
இந்த காலத்தில் நீங்கள் ஏமாற்றப்படுவதற்கு, உங்கள் மீது விமர்சனங்கள் வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. நண்பர்களை கூட நம்ப முடியாத நிலை உருவாகும். நோய், கடன் போன்றவற்றால் மன அழுத்தம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் சில சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படும். அன்புக்குரியவர்களைப் பிரிந்து இருக்க வேண்டியிருக்கும். அனைவரையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்லது.
விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு உடல் நலனில் அதிக கவனம் தேவை
விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறு உடல் உபாதை ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
அரசு மற்றும் உயர் அதிகாரிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் போன்றவற்றில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை இருப்பதால், மன அழுத்தம் ஏற்படலாம். உங்கள் மரியாதைக்கு சோதனை வரக்கூடும். காதல் விவகாரத்தில் தடைகள் ஏற்படும். வாகனத்தை வேகமாக ஓட்டுவதை தவிர்க்கவும்.
ஜாதகத்தில் சூரிய தோஷம் உள்ளவர்கள் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். காலணி, குடை தானம் செய்வது நல்லது.
மேலும் படிக்க | ராசி மாறுகிறார் சூரியன்: எந்த ராசிகளுக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR