செப்டம்பரின் மிகப்பெரிய ராசி மாற்றம்: சூரியனின் மாற்றத்தால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

Sun Transit: சூரியனின் ராசி மாற்றத்தால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 12, 2022, 10:44 AM IST
  • மேஷ ராசிக்கார்ரகளுக்கு சுயக்கட்டுப்பாடு தேவை.
  • பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
  • நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
செப்டம்பரின் மிகப்பெரிய ராசி மாற்றம்: சூரியனின் மாற்றத்தால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்? title=

ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் ராசியில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 5 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் மாதம் மிகப்பெரிய ராசி மாற்றம் நடக்க உள்ளது. 17 செப்டம்பர் 2022 அன்று சூரியன் ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் சூரியன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். சூரியன் கன்னி ராசியில் நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். சூரியனின் ராசி மாற்றத்தால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் - மேஷ ராசிக்கார்ரகளுக்கு சுயக்கட்டுப்பாடு தேவை. பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் செய்வது லாபகரமாக இருக்கும்.

ரிஷபம் - தன்னம்பிக்கை மிகுதியாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் பொறுமையின்மை இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னேற்றப் பாதை அமையும். செலவுகள் அதிகமாக இருக்கும்.

மிதுனம் - பொறுமையாக இருங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். தொழில் நிலை மேம்படும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பப் பொறுப்புகள் கூடும்.

கடகம் - சில தொந்தரவுகள் வந்தாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். எழுத்து-அறிவுசார் படைப்புகள் மதிப்பு மற்றும் மரியாதையைத் தரும். மேலும் வருமானமும் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | புதன் வக்ர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட் 

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். திருமண மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் மரியாதையும் இருக்கும். அரசு - அதிகார ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கன்னி - நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஆனால் அதீத ஆர்வத்தைத் தவிர்க்கவும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். கல்விப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். வருமானம் கூடும். தொழில் துறையில் மரியாதை கிடைக்கும்.

துலாம் - மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கையும் இருக்கும். ஆனால் மனதில் எதிர்மறை தாக்கத்தை தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பரஸ்பர ஒத்துழைப்பும் இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம் - மனம் அமைதியற்று இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். வீண் ஓட்டம் இருக்கும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.

தனுசு - மனம் அமைதியற்று இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். குடும்பத்தில் ஆன்மீக காரியங்கள் நடக்கலாம். இனிப்பு வகையான உணவுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மகரம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஆனால் தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அறிவார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பும் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவையும் பெறலாம்.

கும்பம் - மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். படிப்பதில் ஆர்வம் இருக்கும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்ற பாதை அமையும். வருமானம் அதிகரிக்கும்.

மீனம் - மீன ராசிக்கார்ரகள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரம் பெருகும். முடங்கிய பணத்தை திரும்பப் பெறலாம். செலவுகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | சனியின் அருளால் இந்த ராசிகளுக்கு மகாபுருஷ யோகம்: பண மழையில் நனைவார்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News