சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பண வரவு, அதீத லாபம்.. வெற்றி மழையில் நனைவார்கள்

Sukran Peyarchi: சிம்மத்தில் சுக்கிரனின் பிரவேசம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிக பலன்களை அளிக்கப் போகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 5, 2023, 07:59 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் நன்மை பயக்கும்.
  • உங்கள் இலக்குகளை நெருங்குவீர்கள்.
  • உங்கள் முடிவெடுக்கும் திறன் வலுவாக இருக்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பண வரவு, அதீத லாபம்.. வெற்றி மழையில் நனைவார்கள்  title=

சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: மகிழ்ச்சி, செல்வம், அன்பு மற்றும் ஆடம்பரத்தின் காரணியான சுக்கிரன் சமீபத்தில் தனது ராசியை மாற்றினார். சுக்கிரனின் சஞ்சாரம் மக்களின் பொருளாதார நிலை மற்றும் வாழ்க்கைத் தரத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அவர் தனது வாழ்வில் அனைத்து வித வெற்றிகளையும் பெறுவார்.

சுக்கிரன் பெயர்ச்சி:

அக்டோபர் 2ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியாகி (Venus Transit) சிம்ம ராசியில் பிரவேசித்தார். சிம்மத்தில் சுக்கிரனின் பிரவேசம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிக பலன்களை அளிக்கப் போகிறது. நவம்பர் 3ம் தேதி வரை சிம்மத்தில் சுக்கிரன் தங்கி இவர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைத் தருவார். இந்த காலத்தில் இவர்கள் மகிழ்ச்சி மழையில் நனைவார்கள். அதன் பிறகு சுக்கிரன் கன்னி ராசிக்கு மாறுகிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சியால் ராஜவாழ்க்கை வாழவுள்ள ராசிகள் 

ரிஷப ராசி (Aries)

ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன் கிரகம். அவர் இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் அருள் பாலிக்கிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி நிலுவையில் உள்ள பல பணிகளை முடிக்க இவர்களுக்கு உதவும். நிதி ஆதாயம் உண்டாகும். நிதி பிரச்சனைகள் நீங்கும். வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆளுமையின் கவர்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் நன்மை பயக்கும். உங்கள் இலக்குகளை நெருங்குவீர்கள். உங்கள் முடிவெடுக்கும் திறன் வலுவாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிப்பீர்கள். படைப்பாற்றல் அதிகரித்துக்கொண்டே இருக்கும். கணவன் / மனைவி இடையே உறவு வலுவடையும்.

கடக ராசி (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி தொழிலில் பொன்னான வாய்ப்புகளை அள்ளிதரும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுடன் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்களின் காத்திருப்பு நீங்கும். நல்ல வேலை கிடைக்கும், பண வரவுக்கான புதிய வழிகள் திறக்கப்படும். சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல செய்தி கிடைக்கும். 

மேலும் படிக்க | குரு விளையாடல் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு 'இந்த தேதி' வரை செல்வ செழிப்பு

கன்னி ராசி (Virgo)

சுக்கிரன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை சம்பந்தமான புதிய வாய்ப்புகளை தரும். மூத்த அதிகாரிகள் உங்கள் பணியால் ஈர்க்கப்பட்டு உங்களைப் பாராட்டுவார்கள். இந்த காலத்தில் உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

தனுசு ராசி (Sagittarius)

சுக்கிரன் சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். முதலீடு செய்ய இது நல்ல வாய்ப்பாக இருக்கும். வேலை சம்பந்தமாக சுற்றுலா செல்லலாம். நீங்கள் ஒரு பெரிய தொழில் வாய்ப்பைப் பெறவும் வாய்ப்புள்ளது. 

கும்ப ராசி (Aquarius) 

சுக்கிரனின் இந்த பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் நன்மைகளையும் திருப்தியையும் அனுபவிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் தொழிலில் சில பெரிய சாதனைகளை செய்து காட்டுவீர்கள். இந்த காலத்தில் உங்களின் நிதிப் பிரச்சனைகள் தீரும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியின் கொலைவெறி ஆட்டம்.. அசுர வேகத்தில் வளரப்போகும் ராசிகள் இவையே

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News