ஜோதிடத்தின் கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்ல, கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமும், அதனால் ஏற்படும் யோகங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ள நிலையில், சனி பகவான் கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். இந்நிலையில், சனி மற்றும் செவ்வாய் நேருக்கு நேர் எதிர் கொள்கின்றனர். சனி மற்றும் செவ்வாய் நேருக்கு நேர் இருக்கும் போது உருவாகும் சமசப்தக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
செவ்வாய் ஜூலை மாதம் சிம்ம ராசியில் நுழைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 18 வரை இந்த ராசியில் இருக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமசப்தக யோகத்தில் பல ராசிக்காரர்களுக்கு இம்முறை கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிகள் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும் சம்சப்தக் யோகத்தின் பலனால் பிரச்சனைகள் காணப்படும். நரம்புத் தளர்ச்சியும் நெஞ்சு வலியும் ஏற்படக் கூடும் என்பதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சமூகப் பணிகளில் அதிக செலவுகள் ஏற்படும். அதுமட்டுமின்றி தாயின் உடல்நிலையில் பாதிப்பு இருக்கும். பணியிடத்தில் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீடு, வாகனத்தில் செலவு செய்யலாம்.
துலாம்
சனியும் செவ்வாயும் நேருக்கு நேர் வரும்போது இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் சில இடைஞ்சல்கள் ஏற்படலாம். எனினும், சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். இதனால் செலவுகள் அதிகரிக்கலாம். மறுபுறம், பொருளாதார நிலையில் சிறிது பாதிப்பு ஏற்படக் கூடும். முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை.
மேலும் படிக்க | பூசத்தில் சூரியன்... செல்வ செழிப்பை அனுபவிக்கும் ‘சில’ ராசிகள்!
விருச்சிகம்
வேலையில் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சச்சரவுகள், உடல் நலக் குறைவு போன்ற விஷயங்கள் மனதை பாதிக்கும். கோபம் உங்கள் உங்கள் உடல் நலனை மட்டுமல்ல முன்னேற்றத்தையும் பாதிக்கும். கண் பிரச்சனைகள் தொந்தரவாக இருக்கும் மற்றும் இதற்கு செலவுகள் கூட ஏற்படலாம். தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். பேச்சில் ஏற்படும் மாற்றங்களால் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
மகரம்
குடும்பப் பணிகளில் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் நிதி நெருக்கடியின் சிக்கலையும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் பழைய எதிரிகள் மற்றும் நோய்கள் மீண்டும் வாழ்க்கையில் நுழைந்து பிரச்சனை ஏற்படும். தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படக் கூடும், இது கவலையளிக்கும் விஷயம். முக்கிய வேலைகளில் சில தடைகள் உருவாக வாய்ப்புள்ளதால் மன உளைச்சல் ஏற்படலாம். உறவுகளில் இறுக்கம் ஏற்படலாம். குறுகிய அல்லது நீண்ட பயணங்களால் சோர்வு ஏற்படும்.
கும்பம்
கும்ப ராயினருக்கு சமசப்தக யோகத்தினால், பாதகமான பலன்கள் கிடைக்கும். நிதி ஆதாயம் சிறப்பாக இருந்தாலும், செலவு அதிகமாக இருக்கும். அதனால் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய உறவுகள் உருவாகும் என்றாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலையில் பணியிட மாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. மேலும் உறவினர்கள், நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, உறவில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம்
சனி, செவ்வாய் நேருக்கு நேர் பார்ப்பதால் மீன ராசிக்காரர்களுக்கு பிரச்னைகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் மார்பு சம்பந்தமான அசௌகரியம் அதிகரிக்கும். மகிழ்ச்சி குறையலாம். மறுபுறம், இந்த நேரத்தில் இவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி பிரச்சனை இருக்கலாம். தாயின் உடல்நிலை கவலையை அதிகரிக்கும். வீடு, வாகனம் சம்பந்தமாக டென்ஷன் ஏற்படும். பணியிடத்தில் பொதுவான பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையுடன் கருத்து வேறுபாடு நிலவும். அதிக செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கடன் வாங்கும் சூழல் உருவாகலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது
மேலும் படிக்க | சிம்மத்தில் புதன் பெயர்ச்சி! 12 ராசிகளில் பலன்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ