துலாமில் செவ்வாய்... ருசக யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்!

Mars Transit October 2023: பஞ்ச மஹா புருஷ யோகங்களில் நான்காவதாக செவ்வாயால் உண்டாகும் யோகம் ருசக யோகம். செவ்வாயின் சஞ்சாரத்தால் உருவாகும் ருசக ராஜ யோகம் சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமானது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 15, 2023, 02:26 PM IST
  • செவ்வாய் மீண்டும் அக்டோபர் மாதத்தில் ராசி மாறப் போகிறார்.
  • ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருக்கும் போது, ​​அந்த நபர் தொழில் மற்றும் வேலையில் மகத்தான வெற்றியைப் பெறுகிறார்.
  • செவ்வாயின் அருள் பொழியும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள்.
துலாமில் செவ்வாய்... ருசக யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்! title=

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, செவ்வாய் மீண்டும் அக்டோபர் மாதத்தில் ராசி மாறப் போகிறார். செவ்வாய் அக்டோபர் 3, 2023 அன்று துலாம் ராசிக்குள் நுழைகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருக்கும் போது, ​​அந்த நபர் தொழில் மற்றும் வேலையில் மகத்தான வெற்றியைப் பெறுகிறார். செவ்வாய் தற்போது கன்னி ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. செவ்வாயின் அருள் பொழியும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்

செவ்வாய் சஞ்சாரத்தால் உருவாகும் ருசக ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. உண்மையில், இந்த காலகட்டத்தில், செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய நிதி நன்மைகளைத் தரும். அதன் காரணமாக அவர்களின் வாழ்வில் பொருள் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.  இதனுடன், இந்த ராசிக்காரர்கள் வியாபாரம் மற்றும் வேலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். கடற்படை, ராணுவம் மற்றும் விமானப் படைகளில் பணிபுரிபவர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சி மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அக்டோபர் 30க்குப் பிறகு பொன்மயமாக இருக்கும். 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. தற்போது வியாழன் துலாம் ராசியில் ஏழாவது வீட்டில் அமைந்துள்ளது. அக்டோபர் 3-ம் தேதி செவ்வாய் துலாம் ராசியிலும் பிரவேசிக்கிறார். மற்றும் செவ்வாயால் தொழில், வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். மரியாதை, கௌரவம் போன்ற பலன்களைப் பெறுவீர்கள். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். எந்த ஒரு வேலையையும் ஆவேசமாகச் செய்வது வேலையைக் கெடுத்துவிடும். வரவிருக்கும் நேரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. முதலீடுகளில் நல்ல வருமானம் இருக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாகப் பொறுப்புகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.

மேலும் படிக்க | வேலை, வியாபாரத்தில் வெற்றி: புதன் உதயத்தால் இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களும் செவ்வாய் சஞ்சாரத்தால் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறுவார்கள். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இப்படிப்பட்ட சூழ்நிலையில் விருச்சிக ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் உள்ளிட்ட நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். கைக்கு வராமல் இருக்கும் பணமும் திரும்ப வரலாம். உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவு வெளிப்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். சொத்து பிரச்சனைகளில் தெளிவான முடிவு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகள், உபதேசங்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி.. ராஜவாழ்க்கை அமையும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News