சனியும் புதனும் இணைந்து செய்யும் அட்ராசிட்டி! நிம்மதியாய் வாழ பரிகாரங்கள்

Shani Budh Yuti conjunction: சனி ஒரு பாவகிரகம் என்பதால், சனியுடன் புதன் இணைந்தால் நிகழும் பலன்கள் சற்று மோசமாகவே இருக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 18, 2023, 07:16 AM IST
  • சுப கிரகம் புதனுடன் இணையும் சனி
  • பாவகிரகம் சனியுடன் இணையும் புதன்
  • சனி புதன் இணைவு பரிகாரங்கள்
சனியும் புதனும் இணைந்து செய்யும் அட்ராசிட்டி! நிம்மதியாய் வாழ பரிகாரங்கள் title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இன்று (செப்டம்பர் 18, 2023)  சனி மற்றும் புதன் இணைகின்றனர்.  புதனும் சனியும் எதிரெதிரே சஞ்சரிக்கும்போது இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று இருந்து ஏழாம் பார்வையில் சஞ்சரிக்கும். சனி மற்றும் புதனின் நிலை அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த இரு கிரகங்களில் புதன் சுப கிரகம் என்றும் சனி பாவ கிரகம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. புதன் கிரகம் தனித்து இருந்தால் சுப கிரகமாக விளங்கும் ஆனால், பாவகிரகத்துடன் இணைந்தால் புதன் கிரகமும் பாவகிரகமாக மாறும் இயல்பு உடையது. சனி ஒரு பாவகிரகம் என்பதால், சனியுடன் புதன் இணைந்தால் நிகழும் பலன்கள் சற்று மோசமாகவே இருக்கும். 

சனி புதன் இணைவால் என்ன பாதிப்பு?

காலி இடத்தை வாங்க சிறு தடை ,கடன் வாங்கி காலி இடம் வாங்கும் நிலைமை ஏற்படும். அதாவது ஒருவரிடன் பணம் இருந்தாலும், கடன் வாங்காமல் இடம் வாங்குவதில் பிரச்சனை வரும். நரம்பு தளர்ச்சி, தோல் நோய் வர வாய்ப்பு மற்றும் சில பிரச்சனைகளை சனி புதன் கூட்டணி உருவாக்கும்.

பங்குதாரர் மற்றும் கூட்டாளியுடன் பிரச்சனை, இளைய சகோதரி மற்றும் மாமன் உறவுகளில் இருப்பவர்களிடம் பிரச்சனை என தொழில் மற்றும் குடும்பத்தில் நிம்மதி குலையும் என்றால், மாணவர்களுக்கு கல்வியில் தடை அல்லது மதிப்பெண் குறைவது போன்ற சிக்கல்கள் எழும். 

மேலும் படிக்க | குரு-புதன் கூட்டணி வைத்து பணத்தை அள்ளிக் கொடுத்தால், சனீஸ்வரரும் தங்க மழை பொழிவார் 

வித்யாக்காரனாக புதன் இருப்பதால், பேச்சாளர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், மிமிக்கிரி செய்பவர், ஆசிரியர் போன்றோருக்கு தொழிலில் தடையும் தாமதமும் ஏற்படும்.

ஆனால், ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கட்டங்களின்படி பலன்கள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். அதேபோல, சில விதிவிலக்குகளும் உண்டு. இரண்டு கிரகத்தில் ஒன்று வக்கிரம் அடைவது, சனி மற்றும் புதன் அதிக இடைவெளியில் அமர்வது ஆகியவை இருந்தால், பலன்கள் மாறும். 

அதேபோல, இரு கிரகங்களில் ஏதேனும் ஒன்று பரிவர்த்தனை ஆவது, சுப கிரகத்தின் பார்வை, ஏதேனும் ஒரு கிரகம் நீச்சம் அடைவது என்பதுபோன்ற சந்தர்ப்பங்களில் பலன்கள் மாறுபடும்.

இன்று முதல் சனியும், புதனும் இணைவதால் யார் என்ன பரிகாரம் செய்தால் பிரச்சனையின்றி நிம்மதியாக வாழலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

சனி புதன் இணைவு பரிகாரங்கள்

மேஷம்:  திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம்.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி.. ராஜவாழ்க்கை அமையும்!

ரிஷபம்: திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்று, சிவ பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

மிதுனம்: சிதம்பரம், காளஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம். திருச்செங்கோடு சென்று பூஜைப்பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கடகம்: திருக்கடையூர், திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் சர்க்கரைக் கலந்த பால் வைத்துப் படைத்து வணங்கவும்.

சிம்மம்
சிதம்பரம், திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள சிவனுக்கு சிவப்புச் சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கன்னி: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சியால் குபேர யோகம்.. 2024 இல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்

துலாம்:  சிதம்பரம், காளஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலாபிஷேகம் செய்து வணங்கலாம். 

விருச்சிகம்: திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.

தனுசு:  திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது.

மகரம்: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

கும்பம்: சிதம்பரம், காளஸ்தி ஆகிய சிவதலங்களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும்.

மீனம்: வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். உங்களுக்கு அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலில் குங்குமப்பூ கலந்து அபிஷேகம் செய்து வணங்கலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - பணமழையில் நனையப்போகும் ராசிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News