கும்பத்தில் உதயமாகும் சனி! நெருக்கடியில் சிக்கும் ‘சில’ ராசிகள்!

சனி தேவன் நீதி மற்றும் கர்ம பலன்களை அளிக்கும் தேவன் என்ற பெயரிலும் அறியப்படுகிறார். நல்ல காரியங்கள், தான தர்மங்கள் செய்பவர்களுக்கு சனியின் அருள் என்னும் பாக்கியம் கிடைக்கும். தீய செயல்கள் செய்பவர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 4, 2023, 01:15 PM IST
  • ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசை பாதிப்பை தவிர்க்க அனுமனை வழிபடுவது நன்மை தரும்.
  • சனி உதயத்திற்கான ராசி பலன்.
  • எந்த ஒரு கிரகத்தின் உதயமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சாதகமான அல்லது பாதகமான விளைவைக் ஏற்படுத்துகிறது.
கும்பத்தில் உதயமாகும் சனி! நெருக்கடியில் சிக்கும் ‘சில’ ராசிகள்! title=

சனி உதயம் 2023: ஜோதிடத்தில் சனி தேவருக்கு தனி இடம் உண்டு. சனி தேவன் நீதி மற்றும் கர்ம பலன்களை அளிக்கும் தேவன் என்ற பெயரிலும் அறியப்படுகிறார். சனி தேவன் ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் முழுமையான கணக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.  நல்ல காரியங்கள், தான தர்மங்கள் செய்பவர்களுக்கு சனியின் அருள் என்னும் பாக்கியம் கிடைக்கும். தீய செயல்கள் செய்பவர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் மார்ச் 5 ஆம் தேதி இரவு உதயமாகப் போகிறார். எந்த கிரகத்தின் உதயமும் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை ஏற்படுத்தினாலும், இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நெருக்கடியான கால கட்டமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, எந்த ஒரு கிரகத்தின் உதயமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சாதகமான அல்லது பாதகமான விளைவைக் ஏற்படுத்துகிறது.  இந்தக் காலக்கட்டத்தில் சிலரின் கஷ்டங்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்த நேரத்தில் மகரம், கும்பம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள், ஏழரை நாட்டு சனி காலத்தை கடக்கிறார்கள் மற்றும் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சனி திசையினால் அவதிப்படுகிறார்கள். இதன் போது சனியின் உதயம் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும்.

சனி உதயத்திற்கான ராசி பலன்

சனியின் உதயத்தால் சில ராசிக்காரர்கள்  மிகவும் கவனமாக நடக்க வேண்டும். பல சமயங்களில் சிலருக்கு தன் மனதிற்கு ஏற்றவாறு விஷயங்கள் நடைபெறுவதில்லை.  வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் நஷ்டத்தில் இருக்கலாம். உடல்நலப் பிரச்சினைகள் உங்களை சோர்வடையச் செய்யும். இது மட்டுமின்றி, வியாபாரம் மற்றும் வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. இந்த காலக்கட்டத்தில் கூட தடைபட்ட பணிகள் எதுவும் நிறைவடையாமல் மந்தை வாட்டும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, பெரிய முதலீட்டை தவிர்க்கவும். சட்ட வழக்கில் சிக்கிக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணி புரிபவர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

செய்ய வேண்டிய பரிகாரங்கள்

ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசை பாதிப்பை தவிர்க்க அனுமனை வழிபடுவது நன்மை தரும். அனுமனை வழிபடுவதன் மூலம் சனியின் அசுப பலன்களைத் தவிர்க்கலாம் என்பது ஐதீகம். ஹனுமானின் பக்தர்களின் மீது சனி தேவன் தீய பார்வையை செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்து, சீதாராமனின் திருநாமத்தை உச்சரிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News