64 கலைகளும் கூடி சந்திரன் காட்சியளிக்கும் முழுநிலவு நாள் பங்குனி உத்திரமும் திருக்கல்யாணங்களும்...

Panguni Uthiram Deities Wedding :மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்த அன்னை மகாலட்சுமிக்கு, தன்னுடைய தமார்பில் வீற்றிருக்கும் வரத்தை கடவுள் விஷ்ணு அளித்த நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 16, 2024, 07:09 PM IST
  • தெய்வங்கள் திருமணம் செய்து கொண்ட நன்னாள்
  • பங்குனி உத்திர திருநாளின் சிறப்பு
  • முருகனுக்கு பங்குனி உத்திர காவடி
64 கலைகளும் கூடி சந்திரன் காட்சியளிக்கும் முழுநிலவு நாள் பங்குனி உத்திரமும் திருக்கல்யாணங்களும்... title=

பங்குனி மாதம் பிறந்தாலே, கல்யாணம் களைகட்டிவிடும். இது தெய்வங்களுக்கு திருமணம் செய்து பார்க்கும் மாதம் என்பதால், பக்தர்களுக்குக் கொண்டாட்டம் தான். வழக்கமாக இந்து மதத்தில் முழு நிலவு நாட்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை. தமிழ் மாதங்கள் பன்னிரண்டிலும் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வருவது குறிப்பிட்ட நட்சத்திரத்தை ஒட்டியே அமையும் என்பதைப்போல, தமிழ் ஆண்டின் கடைசி மாதமான பங்குனியில் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வருவதால் பங்குனி உத்திரம் என்று பெயர் பெற்றுள்ளது.

மகாலட்சுமி பிறந்தது பங்குனி உத்திர நாளில்தான் என்று சொல்வார்கள். காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்த  அன்னை மகாலட்சுமிக்கு, தன்னுடைய தமார்பில் வீற்றிருக்கும் வரத்தை கடவுள் விஷ்ணு அளித்ததும் பங்குனி உத்திரத் திருநாளில் தான் என விஷ்ணு புராணம் கூறுகிறது.

பொதுவாக, பங்குனி உத்திர நாளன்று, சூரியனது வெப்பம் அதிமாகவும் சந்திரனின் குளிர்ச்சியும் அதிகமாகவும் இருக்கும். சந்திரன் தன் 64 கலைகளும் கூடி காட்சியளிக்கும் நாள் பங்குனி உத்திரம் என்பதால் சிறப்பு பெறுகிறது. இந்த நாளில் சூரியனும், சந்திரனும் சம பலத்துடன் அமைவதால், மனிதர்களின் உடலும் மனதும் வலிமையாக இருக்கும் என்று சொல்வார்கள்.

பங்குனி உத்திர நாளன்று, கோவில்களில் திருக்கல்யாணங்கள் நடக்கும். சிவன் கோவில்களில், சிவன் பார்வதி திருமணத்தை விட, முருகன் தெய்வயானை திருமணம் விஷேசமாக நடைபெறும். அதேபோல, வைணவர்களின் மரபுப்படி, பெருமாள் கோவில்களில் ஆண்டாள் கல்யாணம், ரங்கநாதர் திருமணம் என பக்தர்கள் திருமணங்களில் கலந்துக் கொண்டு மகிழ்வார்கள்.

மேலும் படிக்க | Vastu: வீட்டில் பணத்தை அள்ளிக் குவிக்கும் சீன வாஸ்து! ஆமையின் வாயில் காசு அதிர்ஷ்டத்தைக் கொட்டும்!

பங்குனி உத்திரத்தன்று முருகனுக்கு காவடி எடுப்பது விசேஷமானது. சிவன் பார்வதி, முருகன் - வள்ளி - தெய்வானை படத்தை வைத்து வழிபடுவது சைவர்களின் வழிபாட்டு முறையாக இருக்கிறது. பங்குனி உத்திர நாளன்று விரதம் இருப்பது சிறப்பு. அதிகாலை எழுந்து இஷ்ட தெய்வத்தை வணங்கி நீராடி அந்தந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை அல்லது துதியை அல்லது தெய்வத்தின் திருநாமத்தை மனதார உச்சரிக்க வேண்டும். 

பங்குனி உத்திர நாளன்று தானங்கள் செய்வது சிறப்பு. பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து, கோவில்களில் நடைபெறும் தெய்வத் திருவிழாவை தரிசித்து மனதார வேண்டினால் மனம் போல் மாங்கல்யம் அமையும் என்றும், வாழ்நாள் முழுவதும் தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ தெய்வங்கள் அருள் புரியும் என்பது நம்பிக்கை. அதனால் தான் இந்த நாளன்று இருக்கும் விரதத்திற்கு திருமண விரதம் என்றும் பெயர் உண்டு.

பங்குனி உத்திரம் விரதமிருந்துதான், மகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்ததாக ஐதீகம். அதேபோல், பங்குனி உத்திர நாளன்று விரதம் இருந்ததால் தான், பிரம்மன் சரஸ்வதியை நாவிலேயே குடி வைத்தார் என்று நம்பப்படுகிறது.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பணம் வந்து கொட்டோ கொட்டனும்னு கொட்டனுமா? இந்த விஷயங்களை செய்துப் பாருங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News