மே 10 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வரும் 82 நாட்கள் ஜாக்பாட்

Mars Transit 2023: செவ்வாய் இம்மாதம், மே 10ல் கடகத்தில் பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 1, 2023, 04:08 PM IST
  • தைரியம், ஆற்றல் மற்றும் வேகம் ஆகியவற்றைத் தரக்கூடியவர் செவ்வாய்.
  • மே 10ல் கடகத்தில் பெயர்ச்சி அடையப்போகிறார்.
  • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்.
மே 10 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வரும் 82 நாட்கள் ஜாக்பாட் title=

செவ்வாய் பெயர்ச்சி 2023 மே மாதம்: ஜோதிடத்தில் முக்கியமானதாக கருதப்படும் 9 கிரகங்களும் குறிப்பிட்ட கால நிலையில் பெயர்ச்சி செய்து கொண்டே இருக்கும். அந்தவகையில், தேவர்களின் தளபதியான செவ்வாய் பூமி காரகன் என அழைக்கப்படுபவர். தைரியம், ஆற்றல் மற்றும் வேகம் ஆகியவற்றைத் தரக்கூடிய செவ்வாய், இம்மாதம், மே 10ல் கடகத்தில் பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

செவ்வாய் ரத்தத்திற்கும் விபத்திற்கும் காரகர். உடன் பிறப்புகளுக்கும் காரகர். ராணுவம், காவல்துறை போன்ற பணி செய்பவர்களுக்கும் காரகராக திகழ்கிறார். சொந்தமாக வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் பங்களா போன்றவை செவ்வாய் பகவானின் தயவு இருந்தால்தான் நம்மால் பெற முடியும். தடையின்றி வீடு கட்ட செவ்வாய் பகவானின் அருள் வேண்டும். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைகிறார்.

மேலும் படிக்க | Venus Transit: உச்சத்தை அளிக்கும் சுக்கிரன்... இவர்களின் வாழ்வில் முன்னேற்றம் மட்டும் தான்!

இந்த நிலையில் செவ்வாய் வருகிற மே 10-ம் தேதி கடக ராசியில் பெயர்ச்சி அடைந்து, ஜூலை 1-ம் தேதி வரை இங்கேயே இருப்பார். அதன் பிறகு சிம்ம ராசிக்குள் நுழைவார். இந்த நேரத்தில் மே 10 முதல் அடுத்த 82 நாட்கள் 4 ராசிகளை சேர்ந்தவர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இதன் போது பல ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அருள் மழையை  பொழிய உள்ளார். இந்த நான்கு ராசிக்காரர்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டாகும்

ரிஷப ராசி: செவ்வாய்ப் பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு சாதகமாக இருக்கும். இதன் போது சமூகத்தில் பதவி, கௌரவம் உயரும். இந்த காலகட்டத்தில் எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தலாம் ஆனால் இந்த காலகட்டத்தில் நீங்கள் அவர்களை தோற்கடிக்க முடியும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு சிறிய பயணம் செல்லலாம். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. 

கன்னி ராசி: ஜோதிட சாஸ்திரப்படி கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும். இந்த நேரத்தில் உங்களின் அனைத்து திட்டங்களும் நிறைவேறும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். செலவுகள் குறையும். இது மட்டுமின்றி நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த நேரத்தில் வாழ்க்கை துணையுடன் நல்லுறவு ஏற்படும்.

மேலும் படிக்க | சுக்கிர மகாதசை: வாழ்க்கை சொர்க்கமாகும்... என்னைக்கும் நீங்க ராஜா தான்!

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு மே 10ஆம் தேதி செவ்வாய்ப் பெயர்ச்சி பல மகிழ்ச்சியைத் தரப் போகிறது. இதன் போது திடீரென பண பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீண்ட காலமாக சிக்கிய பணம் மற்றும் மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். இந்தக் காலக்கட்டத்தில் கடன் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும்.

மீன ராசி: கடக ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது மீன ராசிக்காரர்களுக்கு பண பலம் தரும். இந்த நேரத்தில் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. படிப்புக்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். நீதிமன்றம் தொடர்பான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியம் நடக்கும். இதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | 25 மாதம் வரை இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட், சனியால் முன்னேற்றம் ஏற்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News