சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகள்; பரிகாரங்கள்: கிரகங்களின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஜோதிட சாஸ்திரம், சனி பகவானின் ராசி மாற்றங்களுக்கு சிறப்பு கவனம் கொடுக்கிறது. சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஆக்கப்பூர்வமானதாக இருப்பதில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் 29ம் தேதியன்று சனிபகவான் மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்கு சஞ்சரித்தார். பிறகு மீண்டு ஜூலை மாதம் ராசி மாறிய சனீஸ்வரர், மகர ராசிக்கு பெயர்ந்தார்.
இத்துடன் இந்த ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி முடிந்துவிட்ட்டது என்றாலும், 2023ம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மீண்டும் சனீஸ்வரர் கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறார். 2025 ஏப்ரல் 29 வரை கும்பத்தில் இருக்கும் சனி பகவான், பல ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவார். கும்ப ராசியில் 26 மாதங்கள் சஞ்சரிக்கும் சனிபகவானின் இந்தப் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இந்த காலகட்டத்தில், 4 ராசிக்காரர்கள் பாதகமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
மிகவும் கவனமாக இருக்க வேண்டிய இந்த ராசிக்காரர்கள், தங்கள் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகுந்த எச்சரிக்கையுடன் எடுத்துவைக்க வேண்டும். எச்சரிக்கையுடன் இருப்பதில் ஒரு வழி, பரிக்காரங்கள் என்பதால், ஜனவரி மாத சனிப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகள் மற்றும் அவற்றுக்கான பரிகாரங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது சனியின் நேரடி தாக்கம், நிவாரணம் இது..
கும்பம்: 2022 ஏப்ரல் மாத சனிப் பெயர்ச்சியின்போது, சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தார். அங்கிருந்து 5 ஜூன் 2022 அன்று வக்ர நிலைக்கு மாறினார். இதையடுத்து ஜூலை 12-ம் தேதி சனி பகவான் கும்ப ராசியிலிருந்து விலகி மகர ராசிக்கு பிரவேசித்தார். ஜனவரி 17, 2023 அன்று, மீண்டும் கும்ப ராசிக்குள் நுழையுன் சனி, அந்த ராசியில் ஏழரை நாட்டு சனி என்ற நிலையை கொடுக்கிறார்.
ஏழரை நாட்டானின் பிடியில் இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து பணிகளிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு உதவுவது நல்ல பரிகாரமாக இருக்கும். இது சனி பகவானின் கோப பார்வையிலிருந்து காப்பாற்றும்.
மகரம்: 2017ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு 2025 மார்ச் 29ம் நாள் வரை சனியின் எதிர்மறையான பலன்கள் இருக்கும். தற்போது ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டத்தில் இருக்கும் மகர ராசிக்காரர்கள், பணி இடத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மெளன விரதம் இருப்பது நன்மைக் கொடுக்கும். அதேபோல, சனிக்கிழமைகளில் அரச மரத்தடியில் எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி சனீஸ்வரர்ரை வழிபடுவது நல்ல பரிகாரமாக இருக்கும்.
மீனம்: சனிபகவான் கும்ப ராசியில் சஞ்சாராம் செய்தபோது, மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கியது. ஆனால் சனி மகர ராசியில் பிரவேசித்ததும், மீன ராசிக்கு ஏழரையின் தாக்கம் விலகியது. அடுத்த ஆண்டு ஜனவரி 17, 2023 அன்று சனி கும்ப ராசியில் மீண்டும் நுழையும்போது, மீன ராசியில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கும். மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.
சனி பகவானை சாந்தி செய்யும் பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். பைரவரை வழிபடுவது நன்மைகளை அள்ளிக்கொடுக்கும். அஷ்டமியில் கோயிலுக்கு சென்று பைரவரை தரிசிப்பது நன்மை தரும். உடல் நலனில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் பொறுமையாக நடந்துகொள்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களையும் வீண் விவாதங்களையும் தவிர்க்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஏழரை சனியால் அச்சமா? தாக்கத்தை குறைக்க இந்த எளிய பரிகாரங்கள் கண்டிப்பாக உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ