அஸ்வினி நட்சத்திரத்தில் பிறக்கும் புத்தாண்டு! 3 ராசிகளுக்கு சூரியனின் அருள் உறுதி

Sarvartha Siddhi Yoga 2023: கேது கிரகத்தை தெய்வமாகக் கொண்ட அஸ்வினி நட்சத்திரத்துடன் புத்தாண்டு தொடங்குகிறது. அன்று, அமிர்த யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் உருவாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 21, 2022, 06:32 AM IST
  • சிவனின் அருளால் சர்வ சித்திகளையும் அடையும் 3 ராசிக்காரர்கள்
  • அஸ்வினி நட்சத்திரத்தில் புத்தாண்டு உதிக்கிறது
  • புத்தாண்டின் முதல் நாளில் சர்வார்த்த சித்தி யோகம் உருவாகிறது
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறக்கும் புத்தாண்டு! 3 ராசிகளுக்கு சூரியனின் அருள் உறுதி title=

இன்னும் சில நாட்களில் புத்தாண்டு தொடங்கவிருக்கும் நிலையில், உதிக்கும் புதிய ஆண்டு நல்லதாக மலரவேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். இந்த புத்தாண்டு பிறக்கும் 2023, ஜனவரி முதல் நாளானது, கேது கிரகத்தை தெய்வமாகக் கொண்ட அஸ்வினி நட்சத்திரத்துடன் தொடங்குகிறது. அன்று, அமிர்த யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் உருவாக இருக்கிறது. இந்த சுப யோகம் அனைத்து ராசிகாரர்களுக்கும் அருமையானதாக இருக்கும்.

புத்தாண்டின் முதல் நாளில், 3 அரிய தற்செயல்கள் நடக்கின்றன. கிரகங்கள் ஒன்று சேர்வதால், பல ராசிகளின் அதிர்ஷ்டம் இந்த முறை மிகப்பெரிய திருப்பத்தை எடுக்க உள்ளது. இந்த நாள் ஆண்டின் முதல் நாள், சூரியக் கடவுளுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது.

27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திர நாளன்று, மகர ராசியில் புதன், சுக்கிரன், சனி இணைந்து இருப்பதால் திரிகிரஹி யோகம் உண்டாகும். சர்வார்த்த சித்தி யோகமும் இந்நாளில் உருவாகும்.

புத்தாண்டில், மொத்தம் 162 சர்வார்த்த சித்தி யோகங்கள் செய்யப்படுகின்ற. அதோடு, 143 ரவியோகம் மற்றும் 33 அமிர்த சித்தி யோகம் ஆகியவையும் இருக்கும். புத்தாண்டில், ஜனவரியில் அதிகபட்சமாக சர்வார்த்த சித்தி யோகம் 16 முறை செய்யப்படும். மார்ச், ஏப்ரல், ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த யோகம் தலா 14 முறை உருவாகும்.

மேலும் படிக்க | மகர ராசியில் திரிகிரஹி யோகம் ‘4’ ராசிகளின் தலைவிதியை மாற்றும்!

உங்கள் வாழ்க்கையில் என்ன தாக்கம் இருக்கும்

ஞாயிற்றுக்கிழமை ஆண்டின் முதல் நாளாக இருப்பதால் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் ஏற்படும். அவரது வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசிக்கும். சூரியக் கடவுளின் தாக்கத்தால், தொழில்நுட்பத் துறையில் இந்தியா உலகின் தலைசிறந்த நாடாக மாற முடியும். ஜனவரி 1, 2023 அன்று, சனி மற்றும் தேவகுரு வியாழன் அந்தந்த ராசி அறிகுறிகளில் சஞ்சரிக்கின்றனர்.

சனி தேவன் மகர ராசியிலும், வியாழன் மீன ராசியிலும் அமர்கின்றனர். இதனால், முடங்கிக் கிடக்கும் பணிகளும் புத்தாண்டில் நிறைவடையும் வாய்ப்பு உள்ளது. அதில் குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு சிவனின் அருள் அமிர்தமாக பொழியும் என்று கிரக நிலைகள் உணர்த்துகின்றன. 

மேலும் படிக்க | சுக்ரன் பெயர்ச்சியும் மாளவ்ய ராஜயோகமும்! 3 ராசிகளுக்கு சுகபோக வாழ்க்கை அமையும்!

மேஷம்: சர்வார்த்த சித்தி மற்றும் அமிர்த யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரம் மேம்படும். இந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு அற்புதமாக வாய்க்கும். நீண்ட நாட்களாக திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் புத்தாண்டில் உங்களுக்குக் சாதகமாக முடியும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வெளிநாட்டுப் பயணம் வாய்க்கும். இது எதிர்காலத்தில் பயனுள்ளதாக  இருக்கும்.

ரிஷபம்: சர்வார்த்த சித்தி மற்றும் அமிர்த யோகம் ரிஷப ராசியினருக்கு அருமையான நல்ல பலன்களை வழங்கும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணி புரிபவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். தந்தையுடன் நல்லுறவு உண்டாகும், குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராபவர்கர்ள், வெற்றி பெறலாம்.

மகரம்: திடீர் நிதி வரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதுவரை நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு வந்து சேரும்.  சொத்து, வாகனம் வாங்கலாம். தடைபட்ட காரியங்களில் வெற்றி பெறலாம். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். உங்கள் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை பெறலாம். இதுவரை பாதிப்பு ஏற்படுத்தி வந்த நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.  நிலுவையில் உள்ள சில வேலைகளை முடிக்கும் காலம் வந்துவிட்டது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கும்பத்தில் சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகள், வாழ்க்கை பிரகாசிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News