லட்சுமி அன்னைக்கு பிடித்தமான ராசிகள் இவைதான்: செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்

Lucky Zodiac Signs: லக்ஷ்மி அன்னையின் அருள் நிலைத்திருக்கும் சில ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வசதிகளும், செல்வச்செழிப்புகளும் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 28, 2023, 01:13 PM IST
  • விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் கிரகமாகும்.
  • இந்த கிரகம் வலிமை மற்றும் தைரியத்தின் காரணியாக கருதப்படுகிறது.
  • இந்த ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் உள்ளது.
லட்சுமி அன்னைக்கு பிடித்தமான ராசிகள் இவைதான்: செல்வச்செழிப்பில் திளைப்பார்கள் title=

அன்னை மகாலட்சுமிக்கு பிடித்தமான ராசிகள்: மகாலட்சுமி செல்வத்தின் கடவுளாவார். ஒருவர் மீது லட்சுமி அருள் இருந்தால், அவருக்கு வாழ்வில் என்றும் பணத்துக்கு பஞ்சமிருக்காது. அவர் எப்போதும் பண பற்றாக்குறை இல்லாமல் செல்வச்செழிப்புடன் வாழ்வார். ஆகையால் லட்சுமி அன்னையை மகிழ்விக்க அனைவரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். லட்சுமி அன்னைக்கு பல பிரார்த்தனைகளை செய்கிறார்கள்.

மகாலட்சுமிக்கு சிறப்பு பூஜைகளையும் பரிகாரங்களையும் செய்வதோடு, அவரது ஸ்தோத்திரங்களையும் தினமும் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, லட்சுமி அன்னையின் அருளை பெற பல ஜோதிட பரிகாரங்களும் செய்யப்படுகின்றன. ஆனால், சில நபர்கள் பிறப்பு முதலே லட்சுமி அன்னைக்கு பிடித்தமானவர்களக இருக்கிறார்கள். அவர்கள் பிறந்த ராசிதான் அதற்கு காரணம். மகாலட்சுமியின் அருளால் இவர்களின் அதிர்ஷ்டம் எப்போதும் பிரகாசமாக இருக்கிறது. 

லக்ஷ்மி அன்னையின் அருள் நிலைத்திருக்கும் சில ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வசதிகளும், செல்வச்செழிப்புகளும் கிடைக்கும். மகாலட்சுமியின் ஆசியுடன், இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக அளவில் பணம் சம்பாதிப்பதோடு, ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எப்போதும் பணத் தட்டுப்பாடு இருக்காது. அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் கிரகமாகும். இந்த கிரகம் வலிமை மற்றும் தைரியத்தின் காரணியாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் உள்ளது. இவர்கள் வாழ்க்கையில் உயரங்களைத் தொடுகிறார்கள். இந்த மக்கள் உலகில் தங்கள் அடையாளத்தை உருவாக்குகிறார்கள்.

மேலும் படிக்க | வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய 5 பரிகாரங்கள்..! மஹாலட்சுமி பார்வையால் பண வரவு பெருகும்

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். செல்வம்-தானியங்கள், செழுமை ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறார். இந்த ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி தேவியின் விசேஷ பாக்கியம் உண்டு என்பது ஐதீகம். ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள்.

கடக ராசி

கடக ராசியின் அதிபதி சந்திரன். சந்திரன் மகிழ்ச்சி மற்றும் மனதின் காரணியாக கருதப்படுகிறது. கடக ராசியிலும் அன்னை லட்சுமியின் அருள் உண்டு. ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால், அந்த நபர் மன மகிழ்ச்சியைப் பெறுகிறார். அத்தகையவர்கள் தங்கள் தொழிலில் மிகவும் முன்னேறி ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். 

சிம்மம் 

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்களுக்கு அன்னை லக்ஷ்மியின் அருள் நிலைத்திருக்கும். சிம்மம் ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனை நிச்சயம் பெறுவார்கள். ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறது. கடின உழைப்பின் அடிப்படையில், இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் தங்களுக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்குகிறார்கள்.

லட்சுமி அன்னையின் அருள் பெற;

இந்த ராசிகளை மட்டுமல்ல, யார் தன்னை மனதார பிரார்த்தனை செய்தாலும், தன் அருளை அவர்களுக்கு அளிக்கிறார் அன்னை லட்சுமி. மகாலட்சுமியின் அருள் பெற சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

நமஸ்தேஸ்து மஹாமாயே ஶ்ரீபீடே ஸுரபூஜிதே ।
சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்து தே ॥ 1 ॥

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி ।
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்து தே ॥ 2 ॥

ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி ।
ஸர்வது:க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்து தே ॥ 3 ॥

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி ।
மந்த்ர மூர்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்து தே ॥ 4 ॥

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிஶக்தி மஹேஶ்வரி ।
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்து தே ॥ 5 ॥

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாஶக்தி மஹோதரே ।
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்து தே ॥ 6 ॥

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி ।
பரமேஶி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்து தே ॥ 7 ॥

ஶ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே ।
ஜகஸ்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்து தே ॥ 8 ॥

மஹாலக்ஷ்மஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர: ।
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா ॥

ஏககாலே படேன்னித்யம் மஹாபாப வினாஶனம் ।
த்விகால்ம் ய: படேன்னித்யம் தன தான்ய ஸமன்வித: ॥

த்ரிகாலம் ய: படேன்னித்யம் மஹாஶத்ரு வினாஶனம் ।
மஹாலக்ஷ்மீ ர்பவேன்-னித்யம் ப்ரஸன்னா வரதா ஶுபா ॥

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: லாபத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News