குரு, சந்திரன் சேர்க்கையால் உருவான கஜகேசரி யோகம்: இந்த ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி

Jupiter and Moon Conjunction: கஜகேசரி ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 15, 2023, 02:41 PM IST
  • கஜகேசரி ராஜயோகம் உருவாகி வருவதால் மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள்.
  • இந்த ராசியில் குரு மற்றும் சந்திரன் சேர்க்கை நடக்கப் போகிறது.
  • இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் செல்வச் செழிப்புடன் இருப்பார்கள்.
குரு, சந்திரன் சேர்க்கையால் உருவான கஜகேசரி யோகம்: இந்த ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி title=

குரு மற்றும் சந்திரன் சேர்க்கை: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது. சில சமயங்களில் ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது ​​அது மற்றொரு கிரகத்துடன் சேர்வது பல சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறது. இதேபோல், மே 17 ஆம் தேதி, குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை நடக்கவுள்ளது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

மே 17 அன்று இரவு 7.39 மணிக்கு சந்திரன் மீனத்தில் இருந்து மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இரண்டரை நாட்கள் அதாவது மே 19 வரை அவர் இங்கு தங்கியிருப்பார். ஏற்கனவே குரு பகவான் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். சந்திரன் மேஷ ராசியில் குரு பகவானுடன் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த யோகம் பல ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கஜகேசரி ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் அதிகப்படியான பலன்களை அள்ளித் தரும்

மேஷம்

கஜகேசரி ராஜயோகம் உருவாகி வருவதால் மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த ராசியில் குரு மற்றும் சந்திரன் சேர்க்கை நடக்கப் போகிறது. இந்த நேரத்தில்  இந்த ராசிக்காரர்கள் செல்வச் செழிப்புடன் இருப்பார்கள். இதுமட்டுமின்றி நீண்ட நாட்களாக தடைப் பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கும். புதிய வருமான வழிகள் திறக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். அத்தகைய சூழ்நிலையில், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான முழு வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க | இன்னும் 4 நாட்களில் சனி ஜெயந்தி 2023: இந்த ராசிகளுக்கு மட்டும் பம்பர் ஜாக்பாட்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகம் அனுகூலமான பலன்களைத் தரப்போகிறது. இந்த காலத்தில் ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை, பதவி, கௌரவம் கிடைக்கும். மேலும், திடீர் நிதி ஆதாயமும் பெறலாம். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.

துலாம்

மேஷ ராசியில் குருவும் சந்திரனும் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. அத்தகைய சூழ்நிலையில், துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலத்தில் தொழில், வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும். பண வரவு இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். இதனால் நன்மை உண்டாகும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

கஜகேசரி ராஜயோகம் எப்போது உருவாகிறது?

ஜோதிடத்தின் படி, சில யோகங்களின் உருவாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் குறிப்பாக நன்மை பயக்கும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, எதாவது ஒரு ராசியில் குருவும் சந்திரனும் இணைந்தால், அப்போது கஜகேசரி யோகம் உருவாகிறது. அப்படியானால், ஒரு ஜாதகத்தில் சந்திரனில் இருந்து கேந்திர வீட்டில் (முதல், நான்காவது, ஏழாவது மற்றும் பத்தாம் வீடு) குரு இருந்தால், கஜகேசரி யோகம் உருவாகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அடுத்த 1 மாதம் சூரியன் பகவனால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News