திடீர் பண வரவு: சனி பகவானின் அருளால் இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும், தலைவிதி மாறும்

Sani Peyarchi: சனிபகவான் எழுந்தருளியிருக்கும் நிலையின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். எனினும், 4 ராசிக்காரர்கள் இதனால் ஏகப்பட்ட நற்பலன்களை அனுபவிப்பார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 22, 2023, 01:08 PM IST
  • சனியின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
  • உங்களது விருப்பங்கள் நிறைவேறும்.
  • பதவி உயர்வு ஏற்படலாம்.
திடீர் பண வரவு: சனி பகவானின் அருளால் இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும், தலைவிதி மாறும் title=

கும்பத்தில் சனி பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசி, பயணிக்கும் விதம், இயக்கம், அஸ்தமன உதய நிலைகள் ஆகியவற்றை மாற்றுகின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு அவற்றின் பலமும் மாறுகிறது. கிரகங்களின் பலம் சில சமயம் வலுவிழந்தும் சில சமயம் வலுப்பெற்றும் இருக்கின்றது. 

சனி பகவான்

ஜோதிடத்தில் சனி மிகவும் செல்வாக்கு மிக்க கிரகமாக கருதப்படுகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி ஆகி தற்போது அதில் சஞ்சரித்து வருகிறார். இந்த நேரத்தில் சனி வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 4, 2023 வரை, அவர் இந்த நிலையிலேயே இருப்பார். மேலும் சனி பகவான் சில நாட்களாக அஸ்தமன நிலையில் இருந்தார். ஆகஸ்ட் 15, 2023 அன்று சனி உதயமாகியுள்ளார். சனியின் உதயம் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. ஒரு கிரகம் 1 முதல் 10 டிகிரியில் இருக்கும் போது அதுவும் ஒற்றைப்படை ராசியில் இருந்தால் அந்த நிலை ஜாக்ரத நிலை எனப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவான் எழுந்தருளியிருக்கும் நிலையின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். எனினும், 4 ராசிக்காரர்கள் இதனால் ஏகப்பட்ட நற்பலன்களை அனுபவிப்பார்கள். இவர்களது வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். இவர்களுக்கு சனி பகவான் வலுவான பலன்களைத் தருவார். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்கள் மீது சனி பகவானின் அருள் மழை பொழியும்

மேஷ ராசி: 

சனியின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். உங்களது விருப்பங்கள் நிறைவேறும். பதவி உயர்வு ஏற்படலாம். புதிய வேலை கிடைக்கலாம். நீங்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். உங்கள் பணி வெற்றியடையும். பழைய முதலீடு நன்மை தரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.பல சிரமங்களிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். 

மேலும் படிக்க | வேலை வியாபாரத்தில் வெற்றி: ராகு கேது பெயர்ச்சியால் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜொலிக்கும்

ரிஷப ராசி: 

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள். இந்த காரணத்திற்காக, சனி ரிஷப ராசிக்காரர்களிடம் எப்போதும் கருணை காட்டுகிறார். இந்த நேரம் உங்கள் அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சனி பகவானின் அருளால் எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு கிடைக்கும். தடைபட்ட உங்களின் வேலைகள் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கும்.

மிதுன ராசி: 

மிதுன ராசிக்காரர்களுக்கு உதயமாகியுள்ள சனி நன்மைகளைத் தருவார். சனி மிதுன ராசிக்கார்ரகளின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குவார். இவர்களது பெரிய விருப்பங்களை நிறைவேற்றுவார். நீங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கும் கனவு நனவாகும். வருமானம் நன்றாக இருக்கும்.

துலாம் ராசி: 

சனி பகவானின் எழுச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். சனி உங்களுக்கு சுகபோகங்களைத் தருவார். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் இப்போது உண்டாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து திடீர் பண வரவு இருக்கும். உங்கள் நிதி நிலை மிகவும் நன்றாக இருக்கும். சமூகத்தில் மரியாதையும் கௌரவமும் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியில் ஆசியால் ராஜபாதையில் நடக்கப்போகும் 4 ராசிகள்! இனி எல்லாம் ஜெயமே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News