ரிஷபத்தில் செவ்வாய்; அடுத்த 120 நாட்கள் ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!

MARS Transit in Taurus: செவ்வாய் திருமணம், நிலம், தைரியம், வலிமை மற்றும் சகோதர உறவுகள் ஆகியவற்றின் காரணி.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2022, 04:54 PM IST
  • பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • முக்கியமான சில காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபத்தில் செவ்வாய்; அடுத்த 120 நாட்கள் ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்! title=

ஜோதிடத்தின் படி, செவ்வாய் திருமணம், நிலம், தைரியம், வலிமை மற்றும் சகோதர உறவுகள் ஆகியவற்றின் காரணி. திருமண விஷயத்தில் ஜாதகத்தில் செவ்வாயின் நிலை மிகவும் முக்கியமானது. அதனால்தான் செவ்வாய் கிரகத்தின் மாற்றம் அல்லது செவ்வாய் கிரகத்தின் நிலை மாற்றம் வாழ்க்கையின் முக்கிய நிலைகளை பாதிக்கிறது. சமீபத்தில், நவம்பர் 13, 2022 அன்று, செவ்வாய் கிரகம் பெயர்ச்சியாகி ரிஷப ராசிக்குள் நுழைந்தது. இப்போது மார்ச் 13 வரை செவ்வாய் இந்த ராசியில் இருப்பார். இந்த கால கட்டத்தில் 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகம் இருக்கும். மேலும், தொழிலில் பெரும் முன்னேற்றம் தரும்.

செவ்வாய்ப் பெயர்ச்சி 2023 மார்ச் வரை சுப பலன்களை அள்ளித் தரும்

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய்ப் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். செவ்வாய் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் பிரவேசித்துள்ளார். 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பலன்களை அள்ளித் தருவார். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பண நெருக்கடி தீர்ந்து நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம். நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு இருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம்: 

ராசி மாறி ரிஷப ராசியில் செவ்வாய் பிரவேசித்துள்ளார். அதன் சுப பலன் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகம் இருக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன் காரணமாக முக்கியமான பணிகள் நிறைவடையும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முக்கியமான சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் புதன்; புத்தாண்டில் வெற்றிகளை குவிக்க உள்ள ‘சில’ ராசிகள்!

மகரம்: 

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய வேலை தேடுவதற்கும் நல்ல நேரம். உங்கள் முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | விருச்சிக ராசியில் புத - ஆதித்ய யோகம்; உச்சத்தை தொடப்போகும் ‘6’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News