Lunar Eclipses 2024: வருகிறது சந்திர கிரகணம்.. தேதி, நேரம்.. இந்தியாவில் தெரியுமா?

Lunar Eclipse 2024 September Date Time: இந்த ஆண்டு மீண்டும் செப்டம்பர் மாதம் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் செப்டம்பர் 18ம் தேதி நிகழவுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 9, 2024, 09:44 PM IST
  • சந்திர கிரகணம் எப்போது நிகழ்கிறது?
  • இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 6 நிமிடங்களாக இருக்கும்.
  • இது உலகின் பல பகுதிகளிலும் தெரியும்.
Lunar Eclipses 2024: வருகிறது சந்திர கிரகணம்.. தேதி, நேரம்.. இந்தியாவில் தெரியுமா? title=

Lunar Eclipse 2024 September Date Time: இந்த ஆண்டு மீண்டும் செப்டம்பர் மாதம் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் செப்டம்பர் 18ம் தேதி நிகழவுள்ளது. சந்திர கிரகணம் என்பது கதிரவ ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்கிறது.

சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் உலகம் முழுவதும் எப்போதும் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படும் நிகழ்வாகும். இந்த ஆண்டு இரண்டு சந்திர கிரகணங்கள் நடக்கிறது. இந்த சந்திர கிரகணங்களில் ஒன்று ஏற்கனவே மார்ச் 25, 2024 அன்று நிகழ்ந்தது. இப்போது இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 18, 2024 அன்று நிகழ உள்ளது. இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும், இது உலகின் பல பகுதிகளிலும் தெரியும்.

சந்திர கிரகணம் எப்போது நிகழ்கிறது?
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 06:11 மணிக்கு நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் காலை 10.17 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 6 நிமிடங்களாக இருக்கும். 

மேலும் படிக்க | இன்னும் 9 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றி, அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு

இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா?
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா - உலகின் இரவுப் பகுதியிலிருந்து சிறப்பாகப் பார்க்கப்படும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கிரகணம் தெரியாது.. மேலும் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் பெனும்பிரல் கட்டம் மட்டுமே தெரியும்.

சந்திர கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:

1. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் பகவானி நினைத்து வழிபட வேண்டும்

2. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். 

3. கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது. 

4. குறிப்பாக கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.

5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை: 

1. உணவு மற்றும் தண்ணீரில், தர்ப்பை அல்லது துளசி இலைகளை போட வேண்டும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம். 

2. கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்லி வழிபடுவதால், கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும். 

3. கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுதால் நன்மை உண்டாகும். 

4. சந்திரகிரகணம் முடிந்தவுடன் வெள்ளைப் பொருட்களை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசுப பலன்கள் குறையும்.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி.. அரச வாழ்க்கை, அதிர்ஷ்டம் பொற்கால மழை இந்த ராசிகளுக்கு மட்டுமே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News