Pongal 2023: பொங்கல் முதல் குபேர யோகம் பெறப்போகும் ராசிகள்

Pongal and Makar Sankranti 2023 Rasipalan:பல ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தால் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். சூரியன் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லாட்டரி அடித்தது போன்ற நற்பலன்கள் கிடைக்கவுள்ளன என பார்க்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 14, 2023, 12:02 PM IST
  • சமூக அந்தஸ்து அதிகரிக்கும்.
  • நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • மாணவர்கள் இந்த காலகட்டத்தில் நேர்மறையான முடிவுகளைப் பெறுவார்கள்.
Pongal 2023: பொங்கல் முதல் குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் title=

சூரியன் பெயர்ச்சி 2023 பலன்கள்: வேத ஜோதிடத்தின் படி, சூரியன் அனைத்து 12 கிரகங்களுக்கும் ராஜாவாகக் கருதப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். இன்று இரவு அவர் மகர ராசியில் பிரவேசிக்கவுள்ளார். சூரியனின் பெயர்ச்சி மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகின்றது. அவர் நுழையும் ராசிக்கு ஏற்ப சங்கராந்தியின் பெயர் அமைகிறது. அந்த வகையில் மார்கழி மாதம் முடிந்து தை மாத துவக்கத்தில் சூரியன் மகர ராசியில் நுழையும் நிகழ்வு மகர சக்ங்கராந்தி என அழைக்கப்படுகின்றது.

இன்று இரவு 8.22 மணிக்கு சூரியன் சனிபகவானின் ராசியான மகர ராசியில் பிரவேசிக்கிறார். சூரியனின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு இம்முறை அபரிமிதமான நல்ல பலன்களை அளிக்கவுள்ளது. 

ஜோதிடத்தின்படி, சூரியன் ஆன்மா, சுயமரியாதை, கண்ணியம், ஈகோ மற்றும் தொழில் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார். இப்படிப்பட்ட நிலையில் பல ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தால் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லாட்டரி அடித்தது போன்ற நற்பலன்கள் கிடைக்கவுள்ளன என பார்க்கலாம். 

மேஷம்

ஜோதிடத்தின்படி, மகர ராசியின் ஐந்தாம் வீட்டின் அதிபதியும் சூரியனும் பத்தாம் வீட்டில் அமரப் போகிறார்கள். இந்த நேரத்தில் மேஷ ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இத்துடன், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். தேர்வு முடிவுகள் சாதகமாக அமையும்.

மேலும் படிக்க | Makar Sankranti: எந்தெந்த ராசிகள் என்னென்ன தானம் கொடுக்கலாம்?

கன்னி 

ஜோதிட சாஸ்திரப்படி கன்னி ராசிக்காரர்களுக்கு 12 ஆம் வீட்டின் அதிபதியாக சூரியன் உள்ளார். மறுபுறம், இந்த ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் உங்கள் சமூக அந்தஸ்து அதிகரிக்கும். நிதி ஆதாயம் கிடைக்கும். இது தவிர, மாணவர்கள் இந்த காலகட்டத்தில் நேர்மறையான முடிவுகளைப் பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் சூரியபகவானின் ஆசியால் வெற்றி பெறுவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களின் ஒன்பதாம் வீட்டின் அதிபதி சூரியன். இந்த ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கப் போகிறார். இந்த காலகட்டத்தில் குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். இது தவிர, நீங்கள் பணம் சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அனைத்து தருணங்களிலும் குடும்ப உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Makar Sankranti: மகர சங்கராந்தி ராசிபலன்கள்: சமூக அந்தஸ்து அதிகரிக்கும் ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News