சந்திரனின் ராசியில் நுழையும் சூரியன்: இந்த ராசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்

Sun Transit: இந்த ராசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்!! நாளை கடக ராசிக்கு மாறுகிறார் சூரியன். இதன் காரணமாக 4 ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 15, 2022, 11:38 AM IST
  • நாளை அதாவது ஜூலை 16, 2022, சனிக்கிழமையன்று சூரியன் ராசியை மாற்றப் போகிறார்.
  • சந்திரனின் கடக ராசியில் சூரியன் நுழைவது அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • அடுத்த ஒரு மாதம் கடக ராசியில் சூரியன் இருப்பார்.
சந்திரனின் ராசியில் நுழையும் சூரியன்: இந்த ராசிகளுக்கு அடித்தது ஜாக்பாட் title=

சூரியன் ராசி மாற்றம் ஜூலை 2022: சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகிறார். இந்த வழியில், சூரியன் ஆண்டு முழுவதும் 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம், நாளை அதாவது ஜூலை 16, 2022, சனிக்கிழமையன்று சூரியன் ராசியை மாற்றப் போகிறார். சந்திரனின் கடக ராசியில் சூரியன் நுழைவது அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த ஒரு மாதம் கடக ராசியில் சூரியன் இருப்பார். இந்தக் காலத்தில் சில ராசிக்காரர்கள் சுபமான நல்ல பலன்களைப் பெறுவார்கள். கடக ராசியில் சூரியனின் பிரவேசம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவுகளைத் திறக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

4 ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் மிகவும் உகந்ததாக இருக்கும்

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் பல நன்மைகளைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பளம் கூடும். அரசுப் பணிகளில் இருப்பவர்கள் அல்லது அரசுத் துறை சார்ந்த வேலைகளைச் செய்பவர்கள் பெரிய பலன்களைப் பெறலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது உங்களுக்கு திரும்பக் கிடைக்கும். 

மேலும் படிக்க | சூரியன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் சரியில்லை, எச்சரிக்கை தேவை

சிம்மம்: 

கடகத்தில் சூரியனின் பிரவேசம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.  குறிப்பாக வர்த்தகங்கள், வணிகங்களில் ஈடுபட்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலத்தில் பெரும் லாபம் ஈட்ட முடியும். சிம்ம ராசிக்காரர்கள் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்கள் பெரிய நன்மைகளையும் தரும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 

துலாம்: 

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் சாதகமாக இருக்கும். அவர்கள் தங்கள் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். வேலை மாற விரும்புபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பணமும் செல்வாக்கும் பெருகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சொத்து வாங்க இது நல்ல நேரமாக இருக்கும்.

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்கள் சூரியப் பெயர்ச்சிக்குப் பிறகு ஒரு மாதத்திற்கு பல நன்மைகளைப் பெறுவார்கள். உங்களுக்கு வேலை மாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றம் உங்களுக்கு சாதகமான நன்மைகளை அளிக்கும். நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த நேரம் பல விஷயங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக திட்டமிட்டு வரும் வேலைகளை இப்போது செய்யலாம். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் இப்போது வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் தாக்கத்தால் இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 7 வரை எச்சரிக்கை காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News