செவ்வாய் பெயர்ச்சி 2023 மற்றும் புதன் உதயம் 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி, இயக்கம், வக்ர நிலை, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் என அனைத்து நிலைகளும் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன. அந்த வகையில் இந்த மாதம் (மே) 10 ஆம் தேதி 12 ராசிக்காரர்களுக்கும் மிகவும் சுபமாக இருக்கப் போகிறது. இந்த நாளில் புதனுக்கு சொந்தமான மிதுன ராசியிலிருந்து விலகி சந்திரனுக்குச் சொந்தமான கடக ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறது செவ்வாய் கிரகம். தற்போது செவ்வாய் ஜூலை 1, 2023 வரை இதே ராசியில் தான் இருப்பார். இதன் பிறகு சூரியனுக்கு சொந்தமான சிம்ம ராசிக்குள் பெயர்ச்சி அடைவார். மறுபுறம், கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் வருகிற மே 10 ஆம் தேதி மேஷ ராசியில் உதயமாகிறார். இந்த இரண்டு பெரிய கிரகங்களின் பெயர்ச்சியால், நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறப்போகிறது. அதன்படி இந்த ராசிக்காரர்களுக்கு வருகிற ஒரு மாதம் செல்வச் செழிப்பு மழை பெய்யும். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்பதை இந்த பதிவில் காண்போம்.
செவ்வாய் பெயர்ச்சி 2023: மே 10ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் கடகத்தில் பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைகிறார். இனி 45 நாட்களுக்கு கடகத்தில் நீசமடைந்து தனது சக்தியை இழந்து காணப்படுவார்.
மேலும் படிக்க | இந்த ராசிகளின் கஷ்டகாலம் தீர்ந்துவிட்டது: புதன் உதயம் மகிழ்ச்சி மழையில் நனையவைக்கும்
புதன் உதயம் 2023: ஜோதிடர்களின் கூற்றுப்படி, புதன் உதய நிலையில் சுப பலன்களைத் தருகிறார். இம்முறை புதன் மேஷ ராசியில் உதயமாக இருப்பதால் சிலர் மீது அதிர்ஷ்டக்காற்று வீசப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் பலம், புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் பலத்தால், தொழில் மற்றும் வேலையில் நன்மைகளைப் பெறுவார்கள். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும், சமூக மரியாதையும் கூடும்.
ரிஷப ராசி: செவ்வாய் பெயர்ச்சியால் உங்களின் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் சிலர் உங்களை ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள் ஆனால் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். குறுகிய தூர பயணம் செல்லலாம். சமூகத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். வீட்டில் சுப அல்லது மங்கள காரியங்கள் நடை பெறலாம். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். தீங்கு விளைவிக்கும் வேறு எதையும் மிகைப்படுத்தாதீர்கள்.
சிம்ம ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையும், இதனால் மேல் கல்விக்கு வெளியூர் செல்லும் கனவில் இருக்கும் இந்த ராசிக்காரர்களின் கனவு நிறைவேறும். நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவைத் தரும். வேலை சம்பந்தமாக நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து, தொடர்ந்து யோகா போன்ற உடற்பயிற்ச்சியை செய்யத் தொடங்குங்கள்.
கன்னி ராசி: செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் வெற்றியடைந்து பெரும் பலன்களைப் பெறுவார்கள். அதேபோல் இந்த ராசிக்காரர்கள் தங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். நண்பர்களுடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி உங்களின் வருமானம் பெருகும்.
கும்ப ராசி: புதனின் உதயத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் செய்யப்படும் செயல்பாடு பாராட்டுக்குரியதாக இருக்கும். உங்களின் கடின உழைப்பை சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் தொழில் விஷயமாக சில பெரிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கு சற்று செலவுகள் கூடலாம், ஆனால் நல்ல பொருளாதார நிலை காரணமாக பண தொடர்பான பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | மேஷத்தில் குரு உதயம்: 5 ராசிக்காரர்களுக்கு பணக்கார ராஜயோகம், உங்க ராசி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ