நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது, அத்துடன் ஒருவருக்கு சனி எப்போதுமே கெடுதல் மட்டுமே செய்யுமா என்றால், அப்படி கிடையாது. இருந்தாலும் சனியின் இயக்கத்தின் தாக்கத்தை யாரும் தவிர்த்துவிட முடியாது.
சனி வக்ர கதியில் இயங்கும்போது சிலருக்கு நன்மை என்றால், சிலருக்கு தீமையாக இருக்கும். ஒருவரின் செயல்களைக் கண்காணித்து, நல்ல செயல்களைச் செய்பவருக்கு சுப பலன்களையும், பிறருக்கு தீங்கு செய்பவருக்கு அசுப பலன்களையும் கொடுக்கும் சனீஸ்வரரை சனிபகவானை வழிபடுவதன் மூலம் அருளைப் பெறலாம்.
அண்மையில் (2024 ஜூன் 29) சனீஸ்வரர் வக்ரகதியில் சஞ்சரித்து தற்போது கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். அவர் வக்ர நிவர்த்தி ஆகும்போது சில ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும். சில ராசிக்காரர்கள் பரிகாரங்கள் செய்தால் நன்மை கிடைக்கும். அடுத்த ஆண்டு அதாவது 2025 மார்ச் வரை கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனீஸ்வரர் நவம்பர் 15-ம் தேதி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி பெறுவார்.
சனீஸ்வரரின் எதிர்மறையன தாக்கத்தில் இருந்து விடுபட எந்த ராசிக்காரர்கள் பரிகாரங்களை செய்தால் நிம்மதியாக வாழலாம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
மகர ராசி
சனியின் வக்ர நிவர்த்தியால் மகர ராசிக்காரர்கள் சில பரிகாரங்களை செய்து நல்ல பலன்களை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபமும், பண வரவும் உண்டாக, சிவன் ஆலயத்தில் வருடம் ஒரு முறை அன்னதானம் கொடுக்க வேண்டும், கடுமையாக உழைப்பவர்களுக்கு செய்யும் சிறு உதவியும் பலனளிக்கும். அதிலும் குறிப்பாக உடலால் உழைக்கும் உழைப்பாளிகளுக்கும், ஏழைகளுக்கும் மாற்றுத்திறனாளிக்கும் உதவுவது சனீஸ்வரரை சாந்திப்படுத்தும்.
மேஷம்
வியாபாரத்தில் பண வரவு உண்டாகவும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரவும் தினமும் காகத்திற்கு தயிர், கருப்பு எள், கலந்த சாதம் வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். தயிர் இல்லாமல் எள் கலந்த சாதம் வைக்க கூடாது என்பதை மறந்துவிட வேண்டாம்.
மீன ராசி
தடைபட்ட வேலைகள் அனைத்தும் நடக்கவும், கூடுதல் வருமானம் பெறவும், நல்ல காரியங்கள் நல்லபடியாக முடியவும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரரை வேண்டி, பிரார்த்தனைகளை வைக்க வேண்டும். அன்று அகல் விளக்கு அல்லது இரும்பு சட்டியில் எள்ளெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும்.
சிம்மம்
சனிக்கிழமைகளில் சனீஸ்வரரை வேண்டி, பிரார்த்தனைகளை வைத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தடைபட்ட காரியங்கள் சுமூகமாய் நிறைவேற சனிக்கிழமை நாளன்று அகல் விளக்கு அல்லது இரும்பு சட்டியில் எள்ளெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அனைத்து ராசிகளுக்குமான சனி வழிபாட்டு குறிப்பு
கோவிலுக்கு சென்று சனி பகவானை வணங்கும்போது பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும். திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடிவிட்டு, அங்கு குடி கொண்டிருக்கும் தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாள் பிராணேஸ்வரியையும், சனி பகவானையும் வழிபட்டால் சனி தோஷம் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ