குடும்பத்தில் தம்பதிகளிடையே மோதலா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றினால் போதும்

எலியும் பூனையுமாய் மோதும் தம்பதிகளாக இருந்தாலும் சிவனை இப்படி வழிபட்டால் மனமொத்த தம்பதிகளாய் மாறலாம்... இந்த தீபத்தை ஏத்துங்க

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 9, 2022, 07:42 PM IST
  • திங்கட்கிழமைகளில் சோமநாதருக்கு விளக்கேற்றுவது குடும்பத்தில் ஒற்றுமையை அதிகரிக்கும்
  • தாமரைத் தண்டினால் திரி போடுவது விசேஷமானது
  • வாழைத்தண்டு திரியினால் சிவனுக்கு விளக்கு போடுவது நல்லது
குடும்பத்தில் தம்பதிகளிடையே மோதலா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றினால் போதும் title=

புதுடெல்லி: திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்வது வழக்கம். ஆனால், பயிர் செழித்து வளர்ந்தாலும் கூடவே களையும், பூச்சிகளும் வருவது இயல்பு.

எவ்வளவுதான் புரிந்தவராய், புத்திசாலியாய் இருந்தாலும் கூட, நீண்ட நாளாக ஒன்றாய் வாழ்ந்து வந்தாலும் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. 

ஒவ்வொருவருக்கும் தனித்துவம் உண்டு என்ற நிலையில் இருவரின் கருத்தும் எப்போதும் ஒத்த கருத்தாக இருப்பது அசாத்தியமானது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு வேறு வழியில்லாமல் அனுசரித்து வாழ்பவர்கள் பலர் என்றால், சிலர் நிம்மதியை தொலைத்து விட்டு வாழ்கின்றனர்.

வாழ்க்கை முழுவதும் இணைந்து நடக்க வேண்டிய தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் மன வேறுபாடுகளை களைவது அவசிய. அதற்கு ஆன்மீகம் ஒரு நல்ல, சுலபமான வழியை சொல்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மனக் கசப்பை போக்க வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.

மேலும் படிக்க | பிரிந்தவரையும் ஒன்று சேர்க்கும் மகிமை வாய்ந்த சோமவார விரதம்

இது ஒரு ஜோதிட் பரிகாரமாக இருக்கலாம்.ஆனால், ஒரு விஷயம் இதை செய்தால் நடந்து விடும் என்று மனமார நம்புவது அந்த விஷயத்தை எளிதாக்கும் என்பது மனோதத்துவம் சொல்லும் விளக்கம். எனவே நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றினால், இறை அருளும் இணைந்து மன ஒற்றுமையை ஏற்படுத்தி வாழ்வை வளமாக்கும்.  

முக்கண்ணன் சிவபெருமானுக்கு விளக்கு ஏற்ற வேண்டும். ஒன்பது வாரம் தொடர்ந்து தீபமேற்ற வேண்டும். அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு விளக்கேற்ற வேண்டும். ஆனால், திரியில் தான் கணவன் மனைவியின் ஒற்றுமைக்கான சூட்சமம் இருக்கிறது. சிவனுக்கு ஏற்றப்படும் இந்த விளக்கில் போடப்படும் திரியானது, வாழைத்தண்டு அல்லது தாமரை தண்டினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.  

தண்டில் இருந்து தயாரிக்கப்படும் திரியினால் ஏற்றப்படும் விளக்குக்கு தனித்துவமான பலன் உண்டு. 

மேலும் படிக்க | அமர்நாத்தைப் போலவே திரியம்பகேஸ்வர் கோவிலிலும் பனி லிங்கம்: வைரல் வீடியோ

இந்த திரிகள் இரண்டுமே கிடைக்காவிட்டால், மஞ்சள் நிற பஞ்சுத் திரி போட்டும் தீபம் ஏற்றலாம். இந்த விளக்கை கணவன் மனைவி இருவரும் இணைந்து தம்பதிகளாகவும் ஏற்றலாம். அல்லது, யாருக்கு முடிகிறதோ அவர்கள் மட்டும் கூட ஏற்றலாம்.

ஒன்பது வாரம் தொடர்ந்து திங்கட் கிழமை நாட்களில் அகல் விளக்கு தீபமேற்றி, சிவபெருமானை வணங்கினால், பார்வதி சமேத சிவபெருமானின் அருளும் வாழ்த்தும் உங்கள் வாழ்வை வளமாக்கும்.
கருத்து வேறுபாடுகளும் பிணக்குகளும் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கை வாய்க்கும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News