Guru Gochar: வக்ர நிவர்த்தியான குரு பகவான்! நிம்மதியான வாழ்க்கை அருள்வார்

Jupiter Transit: வக்ர நிவர்த்தியான குரு பகவான்! இன்று மீன ராசிக்கு பெயர்ச்சியான குரு பகவான், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும், பல வித நன்மைகள் கிடைக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2022, 07:37 AM IST
  • வக்ர நிவர்த்தி அடையும் குருவால் மீன ராசிக்காரர்களுக்கு அமோகம்
  • மகரத்திற்க்கு தொழிலில் முன்னேற்றம்
  • துலாம் ராசியினருக்கு பதவி உயர்வு
Guru Gochar: வக்ர நிவர்த்தியான குரு பகவான்! நிம்மதியான வாழ்க்கை அருள்வார் title=

நியூடெல்லி: குரு பிருஹஸ்பதி, புத்தி காரகர், வாழ்க்கைத் துணையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர். குரு பார்த்தால் கோடி நன்மை என்பது மூத்தோர் வாக்கு. ஜோதிடத்தில் தனி இடம் பெற்றுள்ள குரு பகவான், அறிவு, கல்வி, மதப்பணி, புனித இடம், செல்வம், தொண்டு, அறம், திருமணம் என வாழ்வில் பல முக்கியமான விஷயங்களுக்கு அதிபதியான கிரகம் என்று கூறப்படுகிறது. இன்று, நவம்பர் 24ம் தேதி அதிகாலை 4.27 மணிக்கு குரு பகவான், மீன ராசிக்கு பிரவேசித்தார். வக்ர நிவர்த்தியான தேவகுரு பிரகஸ்பதியின் சஞ்சாரத்தால் 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன்கள், மாறுபட்டு இருக்கும். இதில் 12 ராசிகளுக்குமான ராசிபலன்களில், துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கான பலன்களை தெரிந்துக் கொள்வோம். 

துலாம்: ராசியிலிருந்து ஆறாம் வீடான எதிரி வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதால், துலாம் ராசியினருக்கு எதிரிகளும் எதிர்ப்பும் அதிகரிக்கும். உங்களை சேர்ந்தவர்களே உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள், கவனமாக இருங்கள். கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைக்காக எடுக்கும் முயற்சிகளும் வெற்றி பெறும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அறக்கட்டளைகள் மற்றும் அனாதை இல்லங்கள் போன்றவற்றில் தீவிரமாக பங்கேற்கும் வாய்ப்புகளும், நிறைய தொண்டு செய்யும் வாய்ப்பும் அதிகரிக்கும். சமூக கௌரவமும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | விருச்சிகத்தில் உதயமாகும் சுக்கிரன் ‘3’ ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார்!.
 
விருச்சிகம்: ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவானின் தாக்கம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும், குறிப்பாக மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் பொறுப்பு நிறைவேறும்.

புது தம்பதியருக்கு குழந்தைப் பேறு வாய்க்கும். காதல் விஷயங்களில் தீவிரம் இருக்கும். நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதற்கு, குருவின் பெயர்ச்சிசாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
 
தனுசு: ராசியிலிருந்து நான்காவது வீட்டில் சஞ்சரிக்கும் போது, ​​குருவின் தாக்கம் எதிர்பாராத பல ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் நீங்கள் குடும்ப பிரச்சனைகள் மற்றும் மன உளைச்சல்களை சந்திக்க நேரிடும். நிலச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் தீரும்.

வீடு, சொத்து வாங்க விரும்பினால், அதற்கான வேலைகள் சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பயணங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.

மேலும் படிக்க | மிதுனம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை
 
மகரம்: ராசியிலிருந்து மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் வியாழனின் தாக்கம் மகர ராசியினருக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உங்கள் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி, உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்திருந்தால், நீங்கள் இன்னும் வெற்றியடைவீர்கள்.

மதம் மற்றும் ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஏதேனும் பெரிய தொழில் தொடங்க அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், அந்தக் கண்ணோட்டத்தில், குருவின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். திருமண வாழ்வில் இனிமை உண்டாகும். திருமணப் பேச்சுக்கள் வெற்றியடையும்.
 
கும்பம்: ராசியின் இரண்டாம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். கடினமான சூழ்நிலைகளில் கூட நீங்கள் சிறப்பாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். பொருளாதாரம் வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணமும் திரும்ப கிடைக்கும். குடும்பத்தில் பிரிவினை நிலைமை ஏற்படலாம்.

உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், வாய்ப்பு சாதகமாக அமையும்.

மேலும் படிக்க | நவ பஞ்சம தோஷம் படுத்தும் பாடு! பாவம் இந்த 4 ராசிகள்: இது செவ்வாய்-கேது சேர்க்கை தோஷம்
 
மீனம்: சொந்த ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சிறந்த வெற்றியைக் கொடுக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். உங்கள் முடிவுகள் மற்றும் செய்யும் வேலைகளுக்கு பாராட்டு கிடைக்கும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் கூடும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு, மணமாலை கழுத்தில் ஏறும்.  

ஒருமுறை முடிவெடுத்தால் அதை முடித்த பிறகுதான் வேறு வேலையை பார்க்கும் உங்கள் போக்கு பாராட்டைப் பெற்றுத் தரும். குரு பெயர்ச்சி அரசு தொடர்பான வேலைகளுக்கு சாதகமாக இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை அல்லது வேறு நாட்டிற்கு குடி பெயர்வது தொடர்பான வேலைகள் வெற்றி பெறும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஞானக்காரகரின் அருளால் அருமையான வாழ்க்கை அமையப்போகும் 3 ராசிக்காரர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News