சனியின் அருளால் மஹாபுருஷ ராஜயோகம்: 4 ராசிகளின் வாழ்க்கை இரவோடு இரவாக மாறும்

Saturn Transit: சனி பகவான் உருவாக்கும் யோகத்தால் 4 ராசிகளில் இரட்டை மஹாபுருஷ ராஜயோகம் அமைகிறது. இந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 22, 2022, 11:37 AM IST
  • சனி பகவான் ரிஷப ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார்.
  • தொழில் வியாபாரம் செய்பவர்கள் ஆதாயமடைவதோடு, வசதிகளும் பெருகும்.
  • இந்த யோகத்தின் போது குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
சனியின் அருளால் மஹாபுருஷ ராஜயோகம்: 4 ராசிகளின் வாழ்க்கை இரவோடு இரவாக மாறும் title=

மகரத்தில் சனி, ராசிகளில் இதன் தாக்கம்: சமீபத்தில் பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றியுள்ளன. கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெளிவாகத் தெரியும். இந்த கிரக மாற்றம் ஷஷா, மாளவ்ய என்ற இரு பெரும் ராஜயோகங்களை உருவாக்குகின்றன. ஜோதிட சாஸ்திரப்படி இப்போது சூரிய கிரகம் மிதுன ராசியில் இருக்கிறது. இங்கே ஏற்கனவே புதன் கிரகம் அமர்ந்திருப்பதால் புதாதித்ய யோகம் உருவாகிறது. இதனுடன் பத்ர யோகமும் உருவாகி வருகிறது.

அதே நேரத்தில், சுக்கிரன் ரிஷபத்தில் மாளவ்ய யோகத்தை உருவாக்குகிறது. ஜூலை 13 அன்று, மிதுன ராசியில் இருந்து திரிகிரஹி யோகத்துடன் லக்ஷ்மி-நாராயண யோகம் உருவாகிறது. அதே நேரத்தில், சனி 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அசல் திரிகோணி ராசியான மகர ராசியில் நுழைந்துள்ளது. இங்கு செவ்வாய் இருப்பதால் மேஷ ராசியில் சுவாரசியமான யோகம் உருவாகி வருகிறது. வியாழன் மீனத்தில் இருப்பதால் ஹன்ஸ் யோகம் உருவாகிறது. மேலும் சனி சனி யோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த 4 ராசிகளின் கோதார குண்டலியில் இரட்டை மஹாபுருஷ ராஜயோகம் அமைவதால் சிறப்பான பலன் கிடைக்கப் போகிறது. எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஒரே இரவில் மாறப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | சூரிய பகவான் அருளால் ஆடி மாதம் செல்வ மழையில் நனையும் ‘5’ ராசிகள்

சிம்மம்:

சனி இந்த ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இதன் மூலம் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், ஷாஷா மற்றும் மாளவ்யா ஆகிய இரு யோகங்கலும் ராஜ யோகங்களாக மாறி வருகின்றன. இந்த யோகம் திடீர் பண லாபத்தை தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் சில விஷயங்களில் தகராறு ஏற்படலாம். நீதித்துறை விஷயத்தில் வெற்றி பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:

சனி பகவான் இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ஜாதகத்தில் 2 ராஜயோகங்கள் அமைவதால், அனைத்து வேலைகளிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் ஆதாயமடைவதோடு, வசதிகளும் பெருகும். இந்த யோகத்தின் போது குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பயண யோகம் உண்டாகும். இந்த பயணங்களால் அனுகூலமான செய்திகளை பெறுவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசியின் கோச்சார ஜாதகத்தில் சனி பகவான் பன்னிரண்டாம் வீட்டில் பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக நீண்ட பயணம் அல்லது வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. தொழிலில் வளர்ச்சி கூடும். பொருளாதார நிலை மேம்படும். உடல்நலக் குறைவு ஏற்படலாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும். 2 ராஜயோகத்தால் பொருள் வசதிகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும்.

விருச்சிகம்:

சனி பகவான் இந்த ராசிக்கு மூன்றாவது வீட்டில் பெயர்ச்சியாக உள்ளார். விருச்சிக ராசியில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகும். இரண்டு ராஜயோகங்கள் வேலையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். உங்கள் ஊதியம் உயரும். அதனால், பொருளாதார நிலை மேம்படும். 

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள விருச்சிக ராசிக்காரகளுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். வியாபாரிகள் கடந்த கால செயல்களால் லாபம் பெறலாம். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடு நல்ல லாபத்தை அளிக்கும். புதிய தொழில்களை துவங்குவதற்கான நல்ல நேரமாக இது இருக்கும்.

 (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | அங்கார யோகத்தால் கஷ்டப்பட்டு நஷ்டப்படப்போகும் 5 ராசிகள்: ராகு செவ்வாய் தோஷம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News