ஜோதிடத்தில் ராசிகளுக்கும் லக்னங்களுக்கும் ஒரே பெயர் இருக்கின்றன. ஆனால் அவை இரண்டும் ஒன்றல்ல என்பது பலருக்கும் தெரிவதில்லை. சிலருக்கு லக்னம் மற்றும் ராசி இரண்டுமே ஒன்றாக இருக்கும். ராசி பலன்கள் என்று தான் சொல்கிறோம், ஆனால் லக்ன பலன் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்க முடியாது.
'லக்னம்' என்றும் 'ராசி' என்ற இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை எளிமையாக புரிந்து கொள்வோம். வான்வெளியை 360 டிகிரி அளவுகொண்டதாக அனுமானித்து, அதனை 12 சமபங்குகளாக, அதாவது தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மேஷம், ரிஷபம், மிதுனம் கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என ராசிகளாக அறியப்படுகின்றன.
ராசி - விளக்கம்
ஒருவர் பிறக்கும் நேரத்தில், பூமியின் சுழற்சிப் பாதையின் எந்த டிகிரியில் (ராசியில்) பூமி சென்றுகொண்டிருக்கிறதோ, அந்த ராசி வீடு லக்னம் என அறியப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த லக்னம் தான், அவருடைய ஆளுமைத்திறன், சிந்தனை, செயல் உட்பட அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது. ராசி என்பது லக்னத்துக்கு துணை செய்யும் ஓர் அமைப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ராசிப்படி பலன்கள் பார்ப்பதால்தான், ராசிபலன் என அழைக்கிறோம்.
லக்னம் - விளக்கம்
லக்னம் என்பது சுமார் இரண்டு மணிக்கு ஒருமுறை மாறிக் கொண்டே இருக்கும். ராசி மற்றும் லக்னத்தை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துக் கொள்வோம். சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார் என்பதால், சித்திரை மாதத்தின் அதிகாலையில் பிறப்பவர்களின் லக்னம் மேஷ லக்னமாக இருக்கும். சூரிய உதயத்திற்கு அடுத்த இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பிறப்பவர்களின் லக்னம் ரிஷப லக்னமாக இருக்கும். இவ்வாறு 24 மணி நேரத்தில் பிறப்பவர்களின் லக்னம், 12 லக்னங்களின் உத்தேச நேரப்படி கணக்கிடப்படும்.
இன்னும் விளக்கமாக புரிந்துக் கொள்வோம். வைகாசி மாதத்தில், சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அப்போது, சூரிய உதயத்தின்போது பிறப்பவர்களின் லக்னம் மிதுன லக்னமாக இருக்கும். அந்த நாளின் இறுதி 2 மணி நேரங்களில் பிறப்பவரின் லக்னம் மேஷமாக இருக்கும்.
பொதுவாக ஜாதக பலனைச் சொல்லும்போது, லக்னம் மற்றும் ராசி என இரண்டையும் இணைத்து சொல்வதுதான் சரியானதாக இருக்கும். இதற்கும் ஒரு அடிப்படை காரணம் உள்ளது. ஒருவரின் லக்னப்படி ஒரு கிரகம், அவருக்கு கெட்ட பலன்களை அளிப்பதாக இருந்தாலும், அவர் பிறந்த ராசிப்படி அதே கிரகம் யோகமான கிரகமாக இருந்தால், கெடுபலன்கள் குறைந்துவிடும்.
இதுவே, ஒருவரின் லக்னப்படி நல்ல பலன்களை தருவதாக இருந்தாலும், ராசிப்படி அந்த கிரகம் அவயோகமானதாக இருந்தால், நற்பலன்கள் முழுமையாக கிடைக்காது.
மேலும் படிக்க | நோய் பாதிப்பு ஏற்படுத்தும் கிரகம் எது? ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்கும் பரிகாரங்கள்!
பொதுவாகவே ராசியைப் பற்றியே பலருக்கும் அதிகம் தெரியும். ஆனால், லக்னத்தின் அடிப்படையில் ஒருவரின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது. மேஷ லக்னத்தின் அடிப்படை குணாதிசயங்களைத் தெரிந்துக் கொள்வோம்.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் அடிப்படை குணங்கள்
தங்களுடைய திறமைகளை பிறருக்காகவே பயன்படுத்துவார்கள், அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கையே மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அமையும்
உதவி செய்வதில் பெயர் பெற்ற மேஷ லக்னக்காரர்கள், தனக்காக நல்ல காரியங்களை செய்ய, தனது திறமையே உதவியாக இல்லை என்ற மன வருத்தம் இருக்கும். மேஷ லக்னக்காரர்களால் பயனடைந்தவர்கள் கூட, இவர்களின் தேவைகளுக்கு உதவி செய்ய தயங்குவார்கள். அடுத்தவர்களுக்காக வாழ்க்கையில் செய்யும் உதவிகளின் பலன்களை பெற முடியாத துர்பாக்கியசாலிகள் தான் மேஷ லக்னக்காரர்கள்.
துரோகம் மற்றும் ஏமாற்றம் என்பவை மேஷ லக்னக்காரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையாக இருக்கும், நண்பர்களின் கூட்டம் அதிகமாக இருந்தாலும், மேஷ லக்னக்காரர்களுக்கு ஆறுதல் தேவைப்படும்போது நட்பு அருகில் இருக்காது, இருந்தாலும் தோள் கொடுக்கும் நிலையில் நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.
மேலும் படிக்க | குலதெய்வ சாபத்திற்கு தானமே பரிகாரமாக மாறுமா? தெய்வ தோஷத்திற்கான பரிகாரங்கள்!
சிந்திப்பதில் வல்லவர்களாக இருக்கும் மேஷ லக்னக்காரர்கள் அவசரத்திலேயே இருப்பார்கள். மனம் எப்போதும் பரபரப்பாக இருக்கும், மன அமைதி என்பது எப்போதாவது கிடைக்கும் விஷயமாக இருக்கும். யாராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வித்தியாசமான செயல்பாடுகளை செய்வது மேஷ லக்கினக்காரர்களின் இயல்பு ஆகும்.
கற்பனையிலேயே அதிகம் வாழும் இவர்கள் நடைமுறை வாழ்க்கையை சட்டென்று புரிந்துக் கொள்ள முடியாத இயல்பைக் கொண்டவர்களாக இருப்பார்கள், எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பவாதிகளான மேஷ லக்னக்காரர்கள், நினைத்ததை உடனே முடித்துவிட வேண்டும் என்ற அவசர குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவசரம் ஆத்திரம் ஆக்ரோஷம் ஆவேசம் ஆகிய குணங்கள் இவர்களுக்கு எதிர்மறையான பலன்களைக் கொடுக்கும்
கோபத்தில் ஆத்திரத்துடன் செயல்படும் சுபாவம் கொண்ட மேஷ லக்னக்காரர்கள், சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்
ரகசியம் காப்பது என்பது மேஷ லக்னக்காரர்களுக்கு கைவராத கலை.
காதலுக்கு மரியாதைக் செய்யும் குணம் கொண்ட மேஷ லக்னக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டு எல்லா விஷயங்களிலும் முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். குடும்பத்திற்காக விட்டுக் கொடுத்து போகும் குணம் கொண்டவர் மேஷ லக்னக்காரர். சேமிப்பு என்ற கலையை அறியாதவர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், மேஷ லக்னக்காரர்களுக்கு பணம், சொத்து சேர்ப்பது என்பது கொஞ்சம் கஷ்டம் தான், அதற்காக அவர்கள் மெனக்கெட வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ