வாழ்க்கையை புரட்டி போடும் ‘சனி தோஷத்தை’ நீக்கும் பழனி திருஆவினன்குடி சனீஸ்வரன்!

நவகிரகங்களில் ஒருவர், சனிபகவான். அவர் கர்மங்களுக்கு ஏற்ற பலன்களை கொடுப்பதால், நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி தோஷம் நீங்கவும், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும் ஜோதிடத்தில் பல வகையான பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 12, 2023, 12:10 AM IST
வாழ்க்கையை புரட்டி போடும் ‘சனி தோஷத்தை’ நீக்கும் பழனி திருஆவினன்குடி சனீஸ்வரன்! title=

நவகிரகங்களில் ஒருவர், சனிபகவான். அவர் கர்மங்களுக்கு ஏற்ற பலன்களை கொடுப்பதால், நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி தோஷம் நீங்கவும், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும் ஜோதிடத்தில் பல வகையான பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பலரும் பரிகாரம் செய்வதற்குத் திருநள்ளாறு, குச்சனூர் ஆகிய தலங்களுக்குச் செல்வது வழக்கம். அங்கு சென்றிட இயலாதவர்கள் முருகனின் மூன்றாம் படைவீடான பழனி திருஆவினன்குடியில் உள்ள சனீஸ்வரனை வழிபட்டு திருநள்ளாறு, குச்சனூருக்கு நிகரான பலனைப் பெறலாம்

தமிழ்நாட்டிலேயே, ஒற்றைச் சனிக்கான தனிக்கோயில் பழனியில் மட்டுமே உள்ளது. சனீஸ்வரனின் திருவுருவச் சிலையானது, புடைப்புச் சிற்பமாக இல்லாமல் முழுவுருவச் சிலையாக உள்ளது. காக்கை வாகனத்துடன், நின்றகோலத்தில், கிழக்குநோக்கி முருகனுக்கு எதிர்திசையில் அமைந்துள்ள சிறப்பு உடையது இத்தலம்.

திருநள்ளாறு, குச்சனூர் சனீஸ்வரன் தலங்களுக்கு இணையாகப் பழநி ஆவினன்குடி தலமும் சிறப்புடையது என்பதால் தென்மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்கள் முதலில் முருகனை வழிபட்டு, பின்னர் சனீஸ்வரனைத் தரிசிக்க வேண்டும். எள் சாதம் படைத்தும், எள் முடிச்சுகளைத் தலையைச் சுற்றி நெருப்பில் இட்டும், வடைமாலை சாத்தியும், விளக்கேற்றியும் இங்கு வழிபடுகிறார்கள். 

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

சனீஸ்வரனுக்கு உகந்த நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. புரட்டாசி சனிக்கிழமைகள் மிகவும் சிறப்புக்குரியன. சிறப்பு நாள்களில் சனீஸ்வர பகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படும். இத்தலத்துக்கு வந்துசெல்லும் பலருக்கும் இங்கு அமைந்துள்ள சனீஸ்வரனின் சிறப்புகள் தெரியாதிருப்பது, வருத்தத்துக்குரியது. சங்கடங்கள் நீக்கி சகல வளங்களையும் பெறுவதற்கு, பழநி சனீஸ்வரனை வழிபடுங்கள்.

மேலும், சனி அமாவாசை அன்று நதியில் நீராடினால் சனி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். இத்துடன் அனைத்து துன்பங்களும், பிரச்சனைகளும், தடைகளும் நீங்கி விடும். தேவை இருக்கும் ஒருவருக்கு தானம் செய்யுங்கள். அவருக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது தவிர கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது.

சனி தோஷம் நீங்க, உளுந்து, கறுப்பு எள், இரும்பு ஆகியவற்றை கருப்பு துணியில் நனைத்து எண்ணெயில் தோய்த்து, சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இது நிவாரணம் தரும். சனி பகவானின் சாலிசாவைப் படியுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது.

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News