குரு-புதன் கூட்டணி வைத்து பணத்தை அள்ளிக் கொடுத்தால், சனீஸ்வரரும் தங்க மழை பொழிவார்

Three Planets Retrograde Positive Effects: மூன்று கிரகங்கள் வக்ரமானால்? இது 3 ராசிக்காரர்களுக்கு சுப வக்ரம்.... குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் வக்ர பெயர்ச்சி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 7, 2023, 08:18 AM IST
  • குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் வக்ர பெயர்ச்சி
  • மூன்று கிரகங்கள் வக்ரமானால்?
  • இது 3 ராசிக்காரர்களுக்கு சுப வக்ரம்
குரு-புதன் கூட்டணி வைத்து பணத்தை அள்ளிக் கொடுத்தால், சனீஸ்வரரும் தங்க மழை பொழிவார் title=

நியூடெல்லி: கர்மக்காரகர் என்று அழைக்கப்படும் நீதிதேவன் சனீஸ்வரர் மற்றும் புத்தியைக் கொடுக்கும் புதன் மற்றும் செழிப்பைக் கொடுக்கும் வியாழன் ஆகிய மூன்று கிரகங்களும் வக்ர கதியில் இயங்கும்போது, அதன் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். ஆனால், இந்த மூன்று கிரகங்களின் வக்ர இயக்கத்தால் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ஜோதிட சாஸ்திரங்களின் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் இயக்கங்களையும் மாற்றுகின்றன. இந்த நேரத்தில் கோள்கள் சில நேரங்களில் பின்னோக்கி நகர்கின்றன. இதன் தாக்கம் மனித வாழ்வில் காணப்படுகிறது. இந்த நேரத்தில், கிரகங்களின் நிலை சில ராசிகளுக்கு சாதகமான பலனையும் மற்ற ராசிகளுக்கு எதிர்மறை பலனையும் தருகிறது.

சனி பகவான் தீபாவளிக்கு முன்னதாக கும்ப ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். சனிபகவான் கும்ப ராசியில் சனி வக்ர நிவர்த்தி
அடையும் நிலையில், புதன் மற்றும் குருவும் வக்ர கதியில் இயங்குவதால், அவற்றின் கூட்டுத் தாக்கம் மூன்று ராசிகளுக்கு சாதகமாக இருக்கிறது. தனுசு, ரிஷபம் மற்றும் கன்னி ராசியினருக்கு வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்க வைக்கும் இந்த மூன்று கிரகங்களின் வக்ர கூட்டு எதுபோன்ற பலன்களைத் தரும்? தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | அடுத்த மாதம் அட்டகாசம்: செப்டம்பர் கிரக மாற்றங்கலால் இந்த ராசிகள் மீது பண மழை

தனுசு ராசியில் சனி, புதன் மற்றும் குருவின் வக்ர இயக்கத்தின் தாக்கம்

வியாழன், சனி மற்றும் புதன் ஆகியவற்றின் பிற்போக்கு இயக்கம் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். உங்கள் மனம் மதம் சார்ந்த செயல்பாடுகளில் மும்முரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்கள் நடத்தை நன்றாக இருக்கும். நிதி பிரச்சனைகள் தீரும். வேலையில் வெற்றி வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசியில் சனி, புதன் மற்றும் குருவின் வக்ர இயக்கத்தின் தாக்கம்
வியாழன், சனி மற்றும் புதன் ஆகியவற்றின் பிற்போக்கு இயக்கம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஒரு சொத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மூதாதையர்களின் செல்வத்திலிருந்தும் பயனடையலாம். எதிரிகளை வெல்வது எளிதாக இருக்கும், இது பல பிரச்சனைகளை தீர்க்கும்.

கன்னி ராசியில் சனி, புதன் மற்றும் குருவின் வக்ர இயக்கத்தின் தாக்கம்
வியாழன், சனி மற்றும் புதன் ஆகியவற்றின் பிற்போக்கு இயக்கம் கன்னி ராசியினருக்கு பொருளாதார ரீதியாக சாதகமானதாக இருக்கும். இந்த நேரத்தில் எதிர்பாராத இடங்களில் இருந்து பணம் வந்து சேரும். சட்டச் சிக்கல்களை எதிர் கொண்டவர்களுக்கு இது ஆறுதல் அளிக்கும் காலம். புதன் பகவான், உங்களை சட்டச் சிக்கல்களில் இருந்து வெளியேற்றும் வழியைக் காட்டுவார். ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறும். நிலுவையில் இருந்த பணிகள் முடியும். அதுமட்டுமல்ல, குரு பகவானின் அருளாசியினால் பண வரத்தும் அமோகமாக இருக்கும். பணம் சேமிக்கும் வரத்தை சனீஸ்வரரும், புதன் பகவானும் சேர்ந்து அருள்வார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பூரட்டாதி நட்சத்திரத்தில் சூரியனின் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News