செவ்வாயின் அருளால் இந்த ராசிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம்: கேட்டது கிடைக்கும்

Mars Transit: ஜூன் 27, 2022 அன்று செவ்வாய் கிரகம் பெயர்ச்சியாகப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2022, 12:11 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு 2022 ஜூன் மாதத்தின் மீதமுள்ள நாட்கள் மகிழ்ச்சியாகக் கழியும்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் வேலை-வியாபாரத்தில் பெரும் வெற்றியைத் தரும்.
  • பணம் சம்பாதிக்க புதிய வழிகள் கிடைக்கும்.
செவ்வாயின் அருளால் இந்த ராசிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம்: கேட்டது கிடைக்கும் title=

செவ்வாய் பெயர்ச்சி 2022, ராசிகளில் இதன் தாக்கம்: கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜூன் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் பெயர்ந்துள்ளன. 

ஜூன் 27, 2022 அன்று செவ்வாய் கிரகமும் பெயர்ச்சியாகப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கும். செவ்வாயின் இந்த மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாய் அமையவுள்ளது. 

இவர்களுக்கு அடுத்த 7 நாட்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு 2022 ஜூன் மாதத்தின் மீதமுள்ள நாட்கள் மகிழ்ச்சியாகக் கழியும். ஒருபுறம், வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். அதே சமயம் வேலை-வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். 
விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஆகலாம். இந்த இடமாற்றம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித்தரும். பண வரவு சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் நல்ல முதலீடுகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கும். 

மேலும் படிக்க | ஏழைரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள் 

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் வேலை-வியாபாரத்தில் பெரும் வெற்றியைத் தரும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் கிடைக்கும். பண ஆதாயம் உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்க முழு வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிகப்படியான லாபம் காண்பதற்கான காலமாக இது இருக்கும். இந்த காலத்தில் புதிய தொழில்களை துவங்வும் முயற்சிகளை எடுக்கலாம். முதலீட்டிலும் சேமிப்பிலும் கவனம் செலுத்தலாம். 

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இக்காலம் பல வகையிலும் பலன்களைத் தரும். பொருளாதார பலன்கள் உண்டாகும். சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வீட்டில் ஆன்மீக மற்றும் மங்கல நிகழ்வுகள் நடைபெறும். அது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும். தொழிலதிபர்கள் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் ஆதாயம் உண்டாகும். இந்த நேரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். 

மீனம்: 

மீன ராசிக்காரர்களுக்கு திடீரென பண வரவு இருக்கும். நிலம், சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்டத்தின் உதவியால், பெரிய வேலைகளும் எளிதாக முடிவடையும். வீட்டிலும் மகிழ்ச்சி நிலவும். இது முதலீடு செய்ய நல்ல நேரமாக இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் / மனைவி குழந்தைகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவழிப்பீர்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களுக்கு பொறுப்பேற்கவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாயின் அருளால் ஜூன் 27 முதல் 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும், தொட்டது துலங்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News