குரு வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகத்தால் செல்வம் பெருகும்

Jupiter Transit in November: வியாழன் தனது ராசியை மாற்றுவதால், திருமணம், வேலை, பணம் என 5 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் அதிகமாக கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட நல்ல பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 19, 2022, 11:39 AM IST
  • வியாழனின் நிலை மாற்றம் கும்ப ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும்.
  • பணியிடத்தில் வேலையில் வெற்றி கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
குரு வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகத்தால் செல்வம் பெருகும் title=

குரு ராசி மாற்றம் நவம்பர் 2022: நவக்கிரகங்களில் குரு பகவான் பல வித நன்மைகளை அளிக்கும் கிரகமாக, அனைவருக்கும் அனைத்து வித செல்வங்களையும் வழங்கும் கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் மீது குருவின் பார்வை பட்டுவிட்டால் அவரது வாழ்க்கை துலங்கிவிடும் என்பது ஐதீகம். 24 செப்டம்பர் 2022, வியாழக்கிழமை மேலோட்டமாக ஒரு சாதாரண தேதியாகத் தோன்றலாம். ஆனால், ஜோதிட கனக்கீடுகளின் படி இது பல அற்புதங்கள் நிகழவுள்ள ஒரு அற்புதமான தினமாகும். அன்றைய தினத்தில், குரு பகவான்  தனது சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையிலிருந்து மாறி வக்ர நிவர்த்தி அடைந்து இயல்பான நிலைக்கு திரும்பவுள்ளார்.

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குருவின் வக்ர நிவர்த்தியும் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த மாற்றத்தால் ஐந்து ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மட்டுமின்றி, பொருளாதார நிலையும் மேம்படும்.

ஜோதிட சாஸ்திரத்தில் வியாழனுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இது மிகவும் நன்மை பயக்கும் கிரகமாக விவரிக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்கள் வியாழனின் வக்ர நிவர்த்தியை மிகவும் மங்களகரமான நேரமாக கருதுகிறார்கள். தற்போது, ​​வியாழன் தனது சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையில் உள்ளது. செப்டம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 4.36-க்கு மீன ராசியிலேயே வியாழன் வக்ர நிவர்த்தி அடையும். வியாழன் தனது ராசியை மாற்றுவதால், திருமணம், வேலை, பணம் என 5 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் அதிகமாக கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட நல்ல பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.

கும்பம்

வியாழனின் நிலை மாற்றம் கும்ப ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும். பணியிடத்தில் வேலையில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தெடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

குருவின் மாற்றத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கப் போகிறது. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பணி இடத்தில் சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும்.

ரிஷபம்

வியாபாரத்தி ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்ல நேரமாக இருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு வரக்கூடும். பதவி உயர்வுக்கான வாய்ப்பும் உள்ளது. உங்கள் தொழிலில் புதிய உயரங்களைத் தொடுவீர்கள்.

மேலும் படிக்க | ஆண்டின் கடைசி பெயர்ச்சி இது! தனுசு ராசியில் வக்ரமாக சஞ்சரிக்கும் புதனின் தாக்கம் 

கடகம்

குருவின் வக்ர நிவர்த்தியால் கடக ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். பண ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் லாபம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் கிடைக்கும். பணி இடத்தில், ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். அனைத்து இடங்களிலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். 

கன்னி ராசி

குருவின் மாற்றம் கன்னி ராசிக்காரர்களின் புகழை அதிகரிக்கச்செய்யும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும் பெறலாம். எதிர்பாராத இடங்களிலிருந்து பண ஆதாயம் கிட்டும். அனுகூலமான செய்திகள் வந்து சேரும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 2023 புத்தாண்டின் முதல் பெயர்ச்சி! புதனின் வக்ரப் பெயர்ச்சியால் 6 ராசிகளுக்கு நன்மை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News