நவகிரகங்கள் ஒவ்வொன்றின் தன்மையும் வேறுபடும். அனைத்து கிரகங்களும் வெவ்வேறு திசையைப் பார்த்து இருந்தாலும், ஒருவரின் வாழ்க்கையில் நவகிரகங்களின் இருப்பைப் பொறுத்து வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் முடிவாகும். நிம்மதி, மகிழ்ச்சி, தொழில், செல்வம், செல்வாக்கு, உணவு, நோய், கல்வி, அறிவு, வீரம் என ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு கிரகம் நிர்ணயிக்கிறது. அந்த வகையில் ஒருவரின் துணிச்சல் தைரியம் போன்ற குணங்களை நிர்ணயிக்கும் கிரகம் செவ்வாய் ஆகும்.
ஒரு மனிதனுக்கு துணிவை கொடுக்கும் கிரகமான செவ்வாய் ஜாதகத்தில் நன்றாக இருந்தால், அவர் அச்சப்படாமல், சவாலான வேலைகளை கவலையே இல்லாமல் செய்பவராக இருப்பார். மேலும், எதையும் நினைத்து பெரியதாக அலட்டிக் கொள்ளாத சுபாவம் இருக்கும்.
போர் குணம் கொடுக்கும் செவ்வாய்
வீரம், தைரியம் துணிவு என போர்வீரருக்கு இருக்க வேண்டிய அனைத்து குணங்களும் இருந்தாலும், செவ்வாய் நீசமான இடத்தில் இருந்தால், அவர்கள் அவமானத்திற்கோ தண்டனைக்கோ கூட பயப்படமாட்டார்கள். வீரத்திற்கும் சரி, அசட்டு துணிச்சலைக் கொடுப்பதற்கும் ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் இருக்கும் நிலையே காரணமாக இருக்கும்.
தலைவராய் உயர்த்தும் செவ்வாய்
செவ்வாய் வலுப்பெற்று இருந்தால், துணிவு மட்டுமல்லாமல், பொறுமையானவராகவும், தன்னம்பிக்கை கொண்ட தலைவராகவும் இருப்பார்கள். அதேபோல அதிரடி செயல்பாடுகள், வாக்குவாதம் மட்டுமல்ல, விதண்டாவாதம் செய்பவர்களுக்கும் செவ்வாய் வலுவாக இருக்கும்.
சகோதரர்களை காக்கும்/அழிக்கும் செவ்வாய்
வலுவான மன உறுதி, உழைப்பு, ஆற்றல், நிர்வாகத் திறன் என வழிகாட்டி தலைமை ஏற்று நடத்துபவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களும் கொண்ட செவ்வாய், ஒருவரின் உடன்பிறந்தவர்களையும் பாதுகாப்பவராக இருப்பார். இதுவே நீச்சம் பெற்ற செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால், உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு, சண்டை போன்ற அவசெயல்களையும் செய்யவைபபர்.
கோடீஸ்வர யோகம் கொடுக்கும் செவ்வாய்
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1, 4, 9, 10ஆம் வீடுகளில் தனது சுயசாரத்தில் அமர்ந்திருந்தால், ஜாதகருக்கு கோடீஸ்வரராகும் வாய்ப்புகள் உண்டு, யார் தடுத்தாலும் பண வரவை தடுக்க முடியாது.
ஆட்சி அதிகாரம் கொடுக்கும் செவ்வாய்
ஒரு ஜாதகத்தில் தனுசு, சிம்மம், மேஷம், கடகம், மகரம் ஆகிய ஏதாவது ஒன்று லக்னமாக இருந்து அதில் செவ்வாயும் சுயசாரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகர் ஆட்சியாளராகவோ அல்லது அதிகாரம் மிக்க பணியிலோ இருப்பார் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
நீச செவ்வாய்
ஒருவரின் ஜாதகத்தில் நீசம் அடைந்த செவ்வாய், ஆறு, எட்டு அல்லது 12 ஆம் வீட்டிலேயே அமர்ந்திருக்கும் நிலையில், அவருடன் கூட்டு சேரும் சந்திரன் வலுவிழநதிருந்தால், ஜாதகருக்கு உடன்பிறப்பே இருக்காது. இருந்தாலும், அவர் இல்லாதவர் என்ற நிலையே இருக்கும்.
முருகனும் செவ்வாய் கிரகமும்
செவ்வாய் கிரகம் வீரபத்திரர் அம்சம் என்று சொல்வார்கள், செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகர். செவ்வாய்க்கிழமையன்று முருகனை வழிபட்டால், செவ்வாய் தோஷங்கள் அனைத்தும் விலகும். மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதியான செவ்வாய் கிரகத்தின் திசை தெற்கு ஆகும்.
செவ்வாயும் கல்வியும்
செவ்வாய் வலுத்து இருப்பவர்கள், கட்டிடக்கல, பாதுகாப்பு துறை, மருத்துவம், விளையாட்டுத்துறை சார்ந்த கல்வி கற்பார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட, “ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்” என்ற செவ்வாய் காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கல்வி கைகூடும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ