ஏழரை சனியை கடக்க அருள் புரியும் விநாயகரின் அருள் எந்த ராசிக்கு? 6 ராசிகளுக்கு நிம்மதி

Vinayagar Chaturthi Rasipalan: சனீஸ்வரருக்கே கல்தா கொடுத்த கணபதி! விநாயகர் சதுர்த்தியன்று விக்னேஸ்வரரின் அருள் பெறும் ராசிகள் இவை தான்.... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 19, 2023, 08:37 AM IST
  • விநாயக சதுர்த்தி ராசிபலன்
  • கணபதியின் அருள் பெற்று மகிழும் ராசிகள்
  • சனீஸ்வரருக்கே கல்தா கொடுத்த கணபதி
ஏழரை சனியை கடக்க அருள் புரியும் விநாயகரின் அருள் எந்த ராசிக்கு? 6 ராசிகளுக்கு நிம்மதி title=

இன்று விநாயக சதுர்த்தி அன்று, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரர் அபரிமிதமான செல்வத்தையும், நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தருவார். சனீஸ்வர பகவான் கடவுள்களையும் விட்டு வைப்பதில்லை. விநாயகருக்கு ஏழரை நாட்டு சனியின் காலம் வந்தபோது, தனது கடமையை ஆற்ற வந்த சனீஸ்வரரையே சமாளித்தவர் விநாயகர் மட்டுமே.

விநாயகருக்கு ஏழரை

தனது கடமைப்படி ஏழரை நாட்கள் பீடிக்கவேண்டும் என்றும், அதற்கான பலன்களையும் கணபதி அனுபவிக்க வேண்டும் என ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரர் கூற, கடமையை செய்ய தான் தடையாக இருக்க மாட்டேன் என்று சொன்ன விநாயகர், தனது அன்னை பார்வதியிடம் தகவல் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னார். ஆனால், ஒரு சிறிய விண்ணபப்த்தை சனீஸ்வரரிடம் வைத்த விநாயகர், என் முதுகில் இன்று போய்நாளை வருகிறேன் என்று எழுதிவிட்டுச் செல்லுங்கள் என்று கூறினார்.

புத்திசாலி பிள்ளையார்

சனீஸ்வரனும் விநாயகரின் பேச்சை தட்டாமல், அவரது முதுகில் ’இன்று போய் நாளை வருகிறேன்’ என்று எழுதிவிட்டுச் சென்று விட்டார். மறுநாள் தான் கூறியபடியே சனீஸ்வரன் வந்தபோது, தனது முதுகை திருப்பிக் காண்பித்தார் சாதுர்ய விநாயகர். சனீஸ்வரரே நீங்கள் சொன்னை சொல்லை காப்பாற்றுங்கள் என்றுசொல்லி, அவரை அனுப்பி வைத்தார். இப்படியே தொடர, ஏழாவதுநாள் சனீஸ்வரனுக்கு சற்று கோபம் வர, தனது முதுகில் எழுதியதை அழிக்கச் சொல்லிவிட்டார் கணபதி.

மேலும் படிக்க | மீனத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்... அமோகமான வாழ்க்கை!!

சனீஸ்வரரின் ஏமாற்றம்

இனி பிரச்சனை இல்லை என்று நினைத்த சனீஸ்வரரின் நிம்மதியை நீடிக்க விடாத விநாயகர், ஏழரை நாட்கள் என்பது இன்றுடன் முடிந்துவிடும் என்று சொல்லி, நாளை அவரால் தன்னை பிடிக்கமுடியாது என்று விளக்கினார். விநாயகரின் சாதுரியத்தால் சனீஸ்வரனுக்கே தோல்வி கிடைத்தது. அதனால் தான், விக்னங்களை தீர்க்கும் விநாயகரை பிரார்த்திப்போரை சனி தசை கூட பாதிக்காது என்பது ஐதீகம்.  

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று (Vinayagar Chaturthi 2023) கணபதியின் அருளாசியால், நிம்மதியைப் பெறும் ராசிகள் ஆறு.

கணபதியின் அருள் பெற்று மகிழும் ராசிகள் இவை

ரிஷபம்: உங்கள் தொழிலில் சிறப்பான வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். புதிய வேலைகளைத் தொடங்கலாம்.

மிதுனம்: இந்த நேரம் உங்களுக்கு முன்னேற்றமாக இருக்கும். உத்தியோகத்தில் நல்லது நடக்கும். நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகளையும் முடிக்க முடியும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும் ஆனால் காதலில் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும்.

கன்னி: நிலுவையில் உள்ள அரசு வேலைகள் அனைத்தும் நிறைவேறும். பெரிய வெற்றியை அடைய முடியும். பணியில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். சிக்கிய பணம் கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய திட்டத்தில் செயல்பட ஆரம்பிக்கலாம். ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் படிக்க | சனிக்கிழமை இரவில் இந்த பரிகாரங்களை செய்யுங்க... பணக்காரர் ஆவதை யாராலும் தடுக்கவே முடியாது!

விருச்சிகம்: தொழில் நன்றாக நடக்கும். மனதில் மகிழ்ச்சியும் ஆற்றலும் நிறைந்திருக்கும். வேலை சம்பந்தமான கவலைகள் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், பிரச்சனைகள் தீரும்.

தனுசு: உத்தியோகத்தில் எதிர்பார்த்த பலன் கிடைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் அழுத்தம் தேவையில்லை. தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள், திடீரென எதிர்பாரத இடத்தில் இருந்து பணம் வந்து சேரும்.

கும்பம்: உத்யோகத்தில் பெரிய திட்டத்தை நிறைவேற்ற முடியும். வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை இடையே சமநிலையை பராமரிக்கவும், வருமானம் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 66 கிலோ தங்கம் + 336 கிலோ வெள்ளியில் உருவான சதுர்த்தி பிள்ளையார்! கடவுள் கணபதிக்கும் காப்பீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News