ரிஷபத்தில் கஜகேசரி யோகம்! அபரிதமான செல்வத்தால் சந்தோஷத்தில் குதிக்கும் ‘சில’ ராசிகள்!

Gajkesari Yoga in Taurus: குருவும் சந்திரனும் இணையும் போது உருவாகும் கஜகேசரி ராஜயோகம் நாளை உருவாகவுள்ளது. மங்களகரமான இந்த யோகத்தால் அபரிதமான பலன் பெறும் ராசிகள்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 6, 2024, 01:41 PM IST
  • ரிஷப ராசியில் குரு பகவான்
  • சந்திரனும் குருவும் ரிஷபத்தில் இணைவு
  • கஜகேசரி ராஜயோகத்தால் பலனடையும் ராசிகள்
ரிஷபத்தில் கஜகேசரி யோகம்! அபரிதமான செல்வத்தால் சந்தோஷத்தில் குதிக்கும் ‘சில’ ராசிகள்! title=

ரிஷபத்தில் கஜகேசரி யோகம்: நவகிரகங்களில் எந்த கிரகம் ராசி மாறினாலும், அது அனைத்து ராசிகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும். ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெறும். அதேபோல, ஒவ்வொரு கிரகத்தின் இயக்கத்தைப் பொறுத்தும் சஞ்சாரத்தின் காலமும் மாறும். அதாவது சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார் என்றால், சனி இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றும். சந்திரன், தனது ராசியை 3 நாட்களில் மாற்றுகிறார். குரு பகவான், வருடத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். இந்த ஆண்டு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து பெயர்ச்சியாகி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார்.  

சந்திரன் 4ஆம் தேதி அதிகாலை 4:04 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ள நிலையில், ஜூன் 7ம் தேதி இரவு 7:56 மணி வரை இந்த ராசியில் இருப்பார். குரு பகவான் இந்த ஆண்டு மே 1ம் தேதியன்று ரிஷப ராசிக்கு மாறினார். நாளை அதாவது 2024 ஜூன் 7ம் தேதியன்று வரை சந்திரனும் ரிஷப ராசியில் இருப்பதால் குரு பகவான் மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவான கஜகேசரி ராஜ யோகம், மிகவும் சுபமான யோகம் ஆகும்.

மேலும் படிக்க | அட்டகாசமான வாழ்க்கைக்கு தயாராகும் 4 ராசிகள்!  சுக்கிரன் பெயர்ச்சி தரும் ஜாக்பாட்!

ரிஷப ராசியில் குருவும் சந்திரனும் இணைவதால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களைத் தந்தாலும், சில ராசிகளுக்கு பிரபலமாகும் யோகமும், பண பலன்களும் அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வு, முன்னேற்றம் என வாழ்வில் மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்.

ரிஷபத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தின் பலனை அறுவடை செய்யப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

கஜகேசரி யோகத்தின் பலனை அறுவடை செய்யப் பெறப் போகும் ராசிகள்

மேஷம்

கஜகேசரி யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால், மேஷ ராசிக்காரர்கல் மன உளைச்சலில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருப்பார்கள். பொருளாதார நிலையும் மேம்படும்.நிலுவையில் இருந்த பணம் திரும்பக் கிடைக்கும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாகும். செலவுகள் ஆனாலும் அது சுப செலவாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் இணக்கம் ஏற்படும், பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

மேலும் படிக்க | சதயத்தில் இணையும் சனி ராகு! அக்டோபர் முதல் ‘இந்த’ ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கும்!

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகத்தின் பலன் மூன்று நாட்கள் தான் இருக்கும் என்றால், இது ஒரு சிறப்பான மாற்றம் கொடுக்கும் காலமாக இருக்கும். தடைபட்ட வேலைகள் ஏதேனும் இருந்தால், அவை இந்த காலகட்டத்தில் சுலபமாக முடியும். கஜகேசரி யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு காதல் மற்றும் திருமணத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பொன் பொருள் சேர்க்கும் காலம் இது. பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும்.  

கடகம்

கஜகேசரி ராஜ யோகம் துலாம் ராசியினருக்கு நன்மையானதாக இருக்கும். பெரிய பிரச்சனைகளாக தோன்றிய விஷயங்களும் தானாகவே தீர்ந்துவிடும். தொழிலில் வளர்ச்சி இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பளம் அதிகரிக்கும் காலம் இது. வியாபாரிகளுக்கு நல்ல காலம் இது. நோயால் துன்பப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் காலம் இது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். எதிர்பாராத பண வரத்தால் மகிழ்ச்சி ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News