இன்று முதல் அடுத்த 51 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ஐஸ்வர்யம், பணமழை பொழியும்

Mars Transit 2023: செவ்வாய் கடக ராசியில் பெயர்ச்சி அடைந்து 2023 ஜூலை 1 வரை இந்த ராசியில் இருப்பார். இப்படி பட்ட நிலையில் அடுத்த 51 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களாக அமையும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 11, 2023, 03:37 PM IST
  • செவ்வாய் மே 10 ஆம் தேதி கடக ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.
  • செவ்வாய் ஜூலை 1 வரை கடக ராசியில் இருப்பார்.
  • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும்.
இன்று முதல் அடுத்த 51 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ஐஸ்வர்யம், பணமழை பொழியும் title=

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2023: தைரியம், வீரம், நிலம்-செல்வம் மற்றும் திருமணம் ஆகிய காரணிகளான செவ்வாய் மே 10 ஆம் தேதி (நேற்று) கடக ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். செவ்வாய் ஜூலை 1 வரை கடக ராசியில் தான் இருப்பார், அது 12 ராசிகளையும் பாதிக்கும். மறுபுறம், சில ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி கோடீஸ்வர யோகத்தை அள்ளித் தரும். இதற்கிடையில், மே 30 அன்று, செல்வம், ஆடம்பரம் மற்றும் அன்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரனும் கடக ராசிக்குள் நுழைகிறார். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைவதும் சுப பலன்களைத் தரும். இந்த நிலையில் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்து வரும் மனக்கசப்புகள் நீங்கி மற்ற குடும்ப உறுப்பினர்களுடனான உறவும் மேம்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு வாங்கலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் செவ்வாயின் சுப பலன்களால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

மேலும் படிக்க | சனி-செவ்வாய் இந்த ராசிகளை பாடாய் படுத்தும், 'ஷடாஷ்டக் யோகம்' தொல்லைகளைத் தரும்

ரிஷப ராசி: செவ்வாயின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பதவியும் பணமும் தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். குறுகிய தூர பயணங்கள் இருக்கும். வேலையை கவனமாக, திட்டமிட்டுச் செய்தால் மட்டும் சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியும்.

கன்னி ராசி: நிதி பிரச்சனைகள் நீங்கி உங்களின் நிலை வலுவாக இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். அன்புக்குரியவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். மொத்தத்தில் செவ்வாயின் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். இந்த நேரத்தில் கன்னி ராசிக்காரர்கள் மதிப்புமிக்க ஒன்றை வாங்க வாய்ப்பு உள்ளது. காதலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவை சமரசமாகும். 

துலாம் ராசி: செவ்வாய் வேலை செய்யும் இடத்தில் பலம் தருவார். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பதவியும் பொறுப்பும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆனால் இந்த நேரத்தில் தனிப்பட்ட வாழ்க்கையை புறக்கணிக்காதீர்கள். மோதலைத் தவிர்க்கவும், இல்லையெனில் இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பம் மற்றும் அலுவலக வேலைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துவது உங்களுக்கு அவசியமாக இருக்கலாம். உத்தியோகத்தில் உங்களின் பதவி உயர்வு, உரிமைகளும் அதிகரிக்கும். 

கும்ப ராசி: துறையில் உங்கள் பணி பாராட்டப்படும். கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். வருமானம் கூடும். நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும், இது உங்களுக்கு நன்மைகளைத் தரும். எதிரிகள் தோல்வி அடைவார்கள்.  இதுவரை முன்னேறி வந்த தடைகள் நீங்கும். வேலையில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள், உங்கள் செயல்திறன் எல்லா நிலைகளிலும் பாராட்டப்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் வைரம் போல் ஜொலிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News