சூரியனின் ராசி மாற்றம்: இன்று முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், இன்ப ஒளி வீசும்

Sun Transit: சூரியனின் இந்த சஞ்சாரத்தால், சில ராசிகளின் சுப காலம் துவங்கும். எனினும் சிலருக்கு துன்பம் அதிகரிக்கும். சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறி, அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 17, 2022, 11:36 AM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் அரசனான சூரியன் கன்னி ராசியில் நுழைவதால் அதிக பலன் கிடைக்கப் போகிறது.
  • மேஷ ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள்.
  • இந்த நாட்களில் பல நாட்களாக முடங்கியிருந்த பணிகளும் நிறைவடையும்.
சூரியனின் ராசி மாற்றம்: இன்று முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், இன்ப ஒளி வீசும் title=

சூரிய பெயர்ச்சி 2022, ராசிகளில் அதன் விளைவு: ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியனின் பெயர்ச்சி பல ராசிகளை பாதிப்பதாக நம்பப்படுகிறது. இன்று, அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சியாகிறார். ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசி மாற்றத்தால் பல ராசிகளின் அதிர்ஷ்டம் பன்மடங்காக அதிகரிக்கவுள்ளது. சூரியனின் இந்த சஞ்சாரத்தால், சில ராசிகளின் சுப காலம் துவங்கும். எனினும் சிலருக்கு துன்பம் அதிகரிக்கும். சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறி, அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என இந்த பதிவில் காணலாம். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் அரசனான சூரியன் கன்னி ராசியில் நுழைவதால் அதிக பலன் கிடைக்கப் போகிறது. மேஷ ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். இந்த நாட்களில் பல நாட்களாக முடங்கியிருந்த பணிகளும் நிறைவடையும். இத்துடன் அலுவலகத்தில் மரியாதை கூடும். குடும்ப பிரச்சனைகளும் தீரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம். காத்திருந்த சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

சிம்மம்

கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வெற்றிகளைப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். சூரியனின் சஞ்சாரத்தால் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது கிடைக்கும். 

மேலும் படிக்க | சுக்கிரனின் மாற்றத்தால் கண்களின் கண்ணீர் வரும்! சிலருக்கு ஆனந்தக் கண்ணீர்! ஆனால் பலருக்கு??? 

விருச்சிகம்

சூரியனின் ராசி மாற்றத்தால், விருச்சிக ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகிறது. இந்த காலத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதனுடன், புதிய வருமான ஆதாரங்களும் தொடங்கும். இந்தக் காலக்கட்டத்தில் சொத்தில் முதலீடு செய்யலாம். பிற வகையான முதலீடுகளையும் செய்யலாம். இப்போது செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் லாபகரமானதாக இருக்கும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த சஞ்சாரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தொழில், வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். பழைய நீதிமன்ற வழக்குகளில் இப்போது நிம்மதி கிடைக்கும். இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்த இடம் மாற்றம் அனுகூலமான பலன்களை அள்ளித் தரும். இந்த நேரத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வையும் ஊதிய உயர்வையும் பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நிறைவடைகிறது சனியின் வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு பெரிய நிவாரணம், நிம்மதி கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News