8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழு குறித்த அறிவிப்புக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அடுத்த ஊதியக்குழு எப்போது வரும்? இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? இதில் சமீபத்திய அப்டேட் என்ன? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
7வது ஊதியக்குழு:
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், அடுத்த, அதாவது 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர வேண்டும். ஊதியக்குழுக்களை அமல்படுத்த சுமார் 1 1/2 முதல் 2 ஆண்டுகள் ஆவதுண்டு. அப்படிப் பார்த்தால், இப்போது 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வந்தால்தான், 2026 ஆம் ஆண்டு அதை அமல்படுத்த முடியும். இதன் காரணமாகத்தான், மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) தொடர்ந்து இது குறித்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஜனவரி 1, 2026
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை ஜனவரி 1, 2026 -க்கு முன் அமைக்க வாய்ப்புள்ளதாகவே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அரசாங்கம் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் அளிக்கவில்லை.
8வது ஊதியக்குழு ஏன் தேவை?
பொதுவாக ஊதியக்குழுக்கள் அமைக்கப்படும் போது, மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய கட்டமைப்பு மாற்றியமைக்கப்படும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிகப்பட்டு, அதன் அடிப்படையில், அடிப்படை சம்பளத்தில் ஏற்றம் ஏற்படுகின்றது. இது மட்டுமின்றி அலவன்சுகள் மற்றும் பிற காரணிகளிலும் மாற்றம் ஏற்பட்டு ஊழியர்களின் மொத்த ஊதியத்தில் பெரிய ஏற்றம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக, விலைவாசி உயர்வால் அவதிப்படும் ஊழியர்களுக்கு, புதிய ஊதியக்குழுக்கள் பெரிய நிவாரணத்தை அளிக்கின்றன.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்
7வது ஊதியக்குழு அமைக்கப்படும்போதே ஃபிட்மெண்ட் ஃபாக்டரை (Fitment Factor) 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் இருந்தன. ஆனால், அப்போது அது 2.57 மடங்காகவே நிர்ணயிக்கப்பட்டது. ஆகையால் 8வது ஊதியக்குழுவில் கண்டிப்பாக இது 3.68 மடங்காக உயரும் என நம்பப்படுகின்றது. அதன் பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் கிட்டத்தட்ட 26,000 ரூபாயாக மாற வாய்ப்புள்ளது. இது சுமார் 44 சதவிகித ஊதிய ஊயர்வுக்கு (44 Percent Salary Hike) வழி வகுக்கும்.
ஊதிய உயர்வு
8வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். ஊழியர்களுக்கான 20% முதல் 35% வரை சம்பள உயர்வு (Salary Hike) இருக்கலாம் என கூறப்படுகின்றது. லெவல் 1 ஊழியர்களின் சம்பளம் சுமார் ரூ.34,560 ஆகவும், லெவல் 18 ஊழியர்களின் சம்பளம் ரூ.4.8 லட்சமாகவும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
ஊதியக்குழுக்களும் அவற்றில் செய்யப்பட்ட மாற்றங்களும்
5வது ஊதியக் குழு (5th Pay Commission):
- அமைக்கப்பட்ட ஆண்டு: ஏப்ரல் 1994
- நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு: ஜனவரி 1996
- குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்: ரூ 2,750
- பே ஸ்கேல் 51ல் இருந்து 34 ஆக குறைக்கப்பட்டன
- பணிக்கொடை உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
6வது ஊதியக்குழு (6th Pay Commission):
- அமைக்கப்பட்ட ஆண்டு: ஜூலை 2006
- நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு: ஆகஸ்ட் 2008
- குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்: ரூ 7,000
- ஃபிட்மென்ட் ஃபாக்டர்: ஆரம்பத்தில் 1.74க்கு பரிந்துரைக்கப்பட்டது, பின்னர் 1.86 ஆக அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்டது
- வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு (DA) 16% இல் இருந்து 22% ஆக அதிகரிக்கப்பட்டது.
7வது ஊதியக்குழு (7th Pay Commission):
- அமைக்கப்பட்ட ஆண்டு: பிப்ரவரி 28, 2014
- நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு: ஜனவரி 1, 2016
- குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்: ரூ 18,000
- ஃபிட்மென்ட் ஃபாக்டர்: 2.57
- குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 7,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ