Astro: வித்யாகாரகரான புதனின் அருளால் உலகை தன் வசப்படுத்தும் ராசிகள் இவை தான்!

Mercury Transit: ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம், 'வித்யாகாரகன்' எனப்படும் புதன் கிரகம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 12, 2023, 09:39 PM IST
  • வாழ்க்கையில் பணப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையே ஏற்படுவதில்லை.
  • அறிவாற்றல் காரணமாக வெற்றிகளை குவிக்கிறார்கள்.
  • புத்திசாலித்தனமாக பணம் சம்பாதிப்பதில் மற்றவர்களை விட முன்னிலையில் இருப்பார்கள்.
Astro: வித்யாகாரகரான புதனின் அருளால் உலகை தன் வசப்படுத்தும் ராசிகள் இவை தான்! title=

கிரக உலகில் புதன் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம், 'வித்யாகாரகன்' எனப்படும் புதன் கிரகம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதன் கிரகத்தை வலுவாகக் கொண்ட ஒரு நபர், தனது பேச்சின் மூலம் மக்களைக் கவரும் சக்தியை கொண்டுள்ளார். தொழில் மற்றும் வேலை இரண்டிலும் வெற்றிக் கொடியை நாட்டுகிறார். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் பெயர், புகழ், செல்வம் என அனைத்தையும் பெற்று பெருவாழ்வு வாழ்கிறார்.

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் கிரகம் வலுவாக இருந்தால் போதும், அவர் உலகை தன் வசப்படுத்தி விடுவார். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அவர் தன்னுடைய அறிவாற்றலின் மூலமாகத் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு  வெற்றிகளை குவித்து விடுவார். ஜாதகத்தில் புதன் வலிமை பெற்றிருக்கும் ஒருவர் எதையும் நேர்மறைச் சிந்தனையுடன் அணுகுவார்கள். எத்தனைத் தோல்விகள் வந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும்  மனம் தளர மாட்டார்கள்.  

புதன் ஆதிக்கம் செலுத்தும் ஜாதகர் தோல்வி கொடுக்கும் அனுபவங்கள் மூலம் வாழ்க்கைக்கான பாடத்தைக் கற்றுக்கொண்டு, தோல்விகளை வெற்றிகளாக மாற்றும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் இரண்டு ராசிக்காரர்களுக்கும் புதனின் சிறப்பு அருள் இருப்பதால், அவர்கள் வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் அடைகிறார்கள் என ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | செவ்வாயின் வக்ர நிவர்த்தியும் புதனின் உதயமும்! எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி தான்!

ஜோதிட சாஸ்திரத்தில், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன் கிரகம் என கூறப்பட்டுள்ளது. புதன் கிரகம் மிதுனம் மற்றும் கன்னி மீது அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் புதனின் அருள் பெரும் பாக்கியம் கிடைப்பதற்கு இதுவே காரணம். புத பகவனின் அருளால், வெற்றிகளை குவிக்கும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் பணப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையே ஏற்படுவதில்லை.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்கள் சுதந்திரமானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பர்கள். சுயமாக சிந்தித்து சிறந்த முடிவுகளை எடுப்பார்கள். இவர்களுக்குள் பல வகையான திறமைகள் ஒளிந்திருக்கும்.  தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை கண்டு அஞ்சாமல் ஒதுங்காமல், தைரியமாக எதிர்கொள்கின்றனர். இது தவிர, புதன் கிரகத்தின் தாக்கத்தால், இந்த ராசிக்காரர்கள், வேலையில் மட்டுமல்ல தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகளிலும், தங்கள் அறிவு திறமையினால் வெற்றி பெறுவார்கள்.

மேலும் படிக்க | உங்க கணவன்/மனைவி ‘இந்த’ ராசியா! அப்ப உங்களை மாதிரி லக்கி யாருமே இல்லை!

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்கள் எதற்கெடுத்தாலும் சட்டென்று கோபப்படும் தன்மை கொண்டவர்கள். ஆனால் இவர்கள் மனம் பால் போல வெள்ளையானது.  தங்கள் பேச்சுத் திறனால் மற்றவர்களை ஈர்க்கிறார்கள். இந்த ராசியில் புதன் கிரகம் வலுவாக உள்ளதால், அறிவாற்றல் காரணமாக வெற்றிகளை குவிகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் எல்லா சுகங்களையும் பெறுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக பணம் சம்பாதிப்பதில் மற்றவர்களை விட முன்னிலையில் இருப்பார்கள். இது தவிர, இந்த ராசிக்காரர்கள் மகிழ்ச்சிக்காக வெளிப்படையாக பணத்தை செலவிடுகிறார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: வேலை, வியாபாரத்தில் வெளுத்துக்கட்டப்போகும் ராசிகள், லாபம் பெருகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News