ஜாதகத்தில் ராஜயோகம்: ஜோதிடத்தின்படி, ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் இருப்பது கிரகங்களின் இணைவு அல்லது சேர்க்கை எனப்படும். ஜூலை 13 அன்று, சுக்கிரன் மிதுன ராசியில் பிரவேசித்தார். இங்கு ஏற்கனவே புதன் கிரகம் இருந்தது. ஒரே ராசியில் இந்த இரு கிரகங்களும் இணைந்து இருப்பதால் மகா ராஜயோகம் உருவாகி வருகிறது. இதன் பலன் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த மகத்தான யோகத்தால் அளவுகடந்த நன்மைகளை அடைவார்கள். இந்த ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் இரட்டை ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்:
ஜோதிட சாஸ்திரப்படி மிதுன ராசியிலேயே மகாராஜ யோகம் உருவாகி வருவதால் இந்த ராசிக்காரர்களுக்கு குறிப்பாக அதிகப்படியான பலன்கள் கிடைக்கப்போகின்றன. இவர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் 2 ராஜயோகங்கள் உருவாகி வருகின்றன. புதன் தனது சொந்த ராசியில் இருப்பதால் பத்ரா என்ற ராஜயோகம் உருவாகி வருகிறது. அதே சமயம் சுக்கிரனுடன் புதன் சேர்ந்து இருப்பதால் கேந்திர திரிகோண ராஜயோகமும் உருவாகி வருகிறது.
மேலும் படிக்க | ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு நல்ல நேரம்: குரு வக்ர பெயர்ச்சியால் குபேர யோகம்
இந்த இரட்டை ராஜயோகத்தால் உலக ரீதியான மகிழ்ச்சிகள் அதிகமாக கிடைக்கும். அதாவது பொருள் சேரும், செல்வம் பெருகும். அதே சமயம் பத்தாம் இடத்தில் குரு இருப்பதால் ஹன்ஸ் என்ற ராஜயோகமும் உருவாகிறது. இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அறிவாற்றல் அதிகரிக்கும், மன நிம்மதி கிடைக்கும்.
வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே எங்காவது பணியில் இருந்தால், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
கன்னி:
கன்னி ராசிக்கும் இந்த ராஜயோகம் சாதகமாக அமையும். இந்த ராசியின் பெயர்ச்சி ஜாதகத்திலும், புதன் கிரகம் பத்ரா என்ற ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் வியாபாரத்தில் அதிகப்படியான லாபத்தை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை அடைவீர்கள். இதனுடன், புதாதித்ய யோகமும் உருவாகிறது. ஆகையால், வேலை செய்பவர்கள் பணியிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பைப் பெறலாம். இந்த கலாத்தில் பாக்கியம், கர்மா மற்றும் செல்வத்தின் அதிபதிகளான பாக்யேஷ், கர்மேஷ், தனேஷ் ஆகியோர் உடன் இருப்பதால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகி வருகின்றன. இதில் ருச்சக், ஷஷ் என்ற ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த இரண்டு ராஜயோகங்களும் திடீர் பண பலன்களைத் தரும். நீங்கள் சில புதிய வேலைகளைச் செய்ய விரும்பினால், அதற்கு இந்த நேரம் சாதகமானதாக இருக்கும்.
வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இது சரியான நேரமாக இருக்கும். நீங்கள் வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், தற்போது அதற்கு ஏற்ற நேரம். புதிய வேலை வாய்ப்பு வரலாம். எனினும், எந்த வித புதிய முடிவையும் எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தித்து செயப்லடுங்கள். உங்கள் ராசியில் ஏழரை நாட்டு சனி நடக்கிறது. இந்த நேரத்தில், அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நடக்காமல் நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒரே மாதத்தில் நிகழும் 3 கிரகங்களின் ராசி மாற்றம்; நேரடி அருள் பெரும் ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ