வேத ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் ராகுவும் ஒன்று. வட துருவத்தில் சந்திக்கும் இந்த புள்ளி ராகு என்றும், தென் துருவத்தில் உள்ள அதே புள்ளி கேது என்று அழைக்கப்படுகிறது. உங்கள் ராகு சரியாக இல்லாதபோது, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், திருமண வாழ்க்கையிலும் முக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாகவும், நீங்கள் எதிர்பார்க்காத வழிகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு அனைத்தையும் அழித்துவிடும். எனவே, இந்த விளைவுகளை எதிர்கொள்ள அதற்கான பரிகாரங்களை செயல்படுகிறது நல்லது. ராகுவும் கேதுவும் சனியின் சீடர்களான ராகு ரிஷபம் ராசியில் உச்சம் பெற்று விருச்சிக ராசியில் வலுவிழந்தவர். ராகு கடின உழைப்பை உள்ளடக்கிய ஒரு கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் ராகு வலுவாக இருந்தால், அந்த நபர் படிப்பு, அரசியல், ஆராய்ச்சிப், வியாபாரம், போக்குவரத்து, ஊடகங்கள், நடிப்பு போன்றவற்றில் உச்சத்தில் இருப்பார். ராகு மிதுனம், கன்னி, தனுசு ராசிகளுடன் நட்புறவு கொண்டவர்.
மேலும் படிக்க | பண மழையோடு வரும் குரு.. இந்த ராசிகளுக்கு உச்ச ராஜயோகம், கோடீஸ்வர யோகம்
ராகு நம் வாழ்க்கையை மாற்றும் மற்றும் சில விஷயங்களை கடினமாக்கும். பொதுவாக ஜாதகத்தில் ராகுவின் நிலை கெடுதலாக இருக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அடுத்தவர்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்வது, பிறருக்கு கருணை காட்டுவது, வீட்டில் உள்ள பொருட்களைத் தானம் செய்வது போன்றவை ராகுவின் தாக்கத்தைக் குறைத்து நல்ல விஷயங்களை உங்களுக்கு கொண்டுவர உதவும் என்று பலர் நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் எந்த எந்த பொருட்களை தானம் செய்தால் ராகுவின் தாக்கம் குறைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.
அமாவாசை தேங்காய் தானம் செய்யுங்கள்
அமாவாசை அன்று கோவிலில் மக்களுக்கு தண்ணீர் மற்றும் தேங்காய்களை தானமாக வழங்க வேண்டும். மேலும் ஓடும் நீரில் தேங்காயை விடுவது ராகுவை சாந்தப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
யானைக்கு வாழைப்பழம்
பொதுவாக யானைகளுக்கு வாழைப்பழம் கொடுப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது மற்றும் ஒருவரின் வாழ்க்கையில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது.
கோதுமை, வெல்லம் தானம் செய்யுங்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் கோதுமை, வெல்லம் போன்ற உணவுகளை தானம் செய்யுங்கள். இந்த பொருட்களை ஒரு செப்பு பாத்திரத்தில் வைத்து நீரில் விடுவது உங்களுக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
சர்க்கரையை பிரசாதமாக வழங்கவும்
உங்கள் வாழ்வில் நல்ல ஆற்றலை பெற கோவிலுக்கு சர்க்கரையை தனமாக வழங்குங்கள்.
பார்வையற்றோருக்கு உணவு வழங்குங்கள்
பார்வைக் குறைபாடு உள்ள நபர்களுக்கு உணவை தானமாக வழங்குவதன் மூலம் உங்கள் வாழ்வில் நல்லது நடக்கும்.
தாழ்த்தப்பட்டோருக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்
ஆதரவற்ற மக்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு உணவு மற்றும் ஆடைகளை தானம் செய்யுங்கள். இந்த செயல் ராகுவை மகிழ்வித்து, உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.
நாய்களுக்கு உணவளிக்கவும்
தெரு நாய்களுக்கு உணவு வழங்குவது உங்களுக்கு நன்மைகளை வழங்கும். உணவளிப்பதன் மூலம் நாய்கள் பசி ஆரும். இதே போல பறவைகள், எறும்புகள் மற்றும் பிற விலங்குகளுக்கு உணவளியுங்கள்.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு பல வழிகளில் பணம் தேடி வரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ