சனி, சுக்கிரன் பெயர்ச்சியால் ஷடாஷ்டக யோகம்: இந்த ராசிகளுக்கு ஆபத்து

Shadashtak Yogam 2022:  சனியும் சுக்கிரனும் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தை உண்டாக்கும். எந்த கிரகத்தின் ஷடாஷ்டக யோகமும் நல்லதாக கருதப்படவில்லை. இந்த ராசிகளுக்கு இது அசுபமாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 21, 2022, 04:38 PM IST
  • 4 ராசிக்காரர்கள் 24 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் உடல்நலக் குறைவைத் தரும்.
  • விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால், இந்த காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சனி, சுக்கிரன் பெயர்ச்சியால் ஷடாஷ்டக யோகம்: இந்த ராசிகளுக்கு ஆபத்து title=

சனி சுக்ர ஷடாஷ்டக யோகம்: தற்போது, ​​சனி பகவான் மகர ராசியில் உள்ளார். அவர் வக்ர நகர்வில் தற்போது சஞ்சரித்து வருகிறார். சுக்கிரன் கிரகம் கடகத்தில் உள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி சுக்கிரன் கிரகம் கடக ராசியிலிருந்து விலகி சிம்ம ராசிக்குள் நுழைகிறது. இந்த நிலையில், சனியும் சுக்கிரனும் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தை உண்டாக்கும். ஷடாஷ்டக யோகம் என்றால் சுக்கிரன் சனியிலிருந்து அஷ்டகமாகவும், சுக்கிரன் சனிக்கு 6 வீடுகள் தள்ளியும் இருப்பார் என்று பொருள். செப்டம்பர் 24 வரை சுக்கிரன் இந்த நிலையில் நீடிப்பார். 

ஜோதிடர் சசிசேகர் திரிபாதியின் கூற்றுப்படி, எந்த கிரகத்தின் ஷடாஷ்டக் யோகமும் நல்லதாக கருதப்படவில்லை. சனி மற்றும் சுக்கிரனின் ஷடாஷ்டக் யோகம் அசுபமானது என்று சொல்ல முடியாது, ஆனால், இந்த நேரத்தில் குறிப்பாக 4 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் அசுபமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

4 ராசிக்காரர்கள் 24 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்

2022 செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 24 வரை சனி-சுக்கிரன் சேர்க்கை ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கும். இந்த நேரத்தில் 4 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | Lucky Numbers of 22 July: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நாளை சிறப்பு நாள் 

ரிஷபம்: 

ஷடாஷ்டக யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகளை மூடும். இவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் சோம்பலைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் ரிஷப ராசிக்காரர்கள் பண விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் உடல்நலக் குறைவைத் தரும். விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால், இந்த காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். இது தவிர, சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். தினமும்  நடை பெயர்ச்சி செய்வதை பழக்கமாகக் கொள்ளுங்கள். 

தனுசு: 

சனி-சுக்கிரனின் ஷடாஷ்டக யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வைத் தடுக்கும். கசப்பான பேச்சால் அவர்கள் பாதிக்கப்படலாம். பணியிடத்தில் நீங்கள் எவ்வளவு கண்ணியமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்தது. வியாபாரிகளும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்ப சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்படலாம். சண்டைகளை தவிர்க்கவும்.

கும்பம்: 

கும்ப ராசிக்கார்ரகளுக்கு ஷடாஷ்டக யோகம் திருமண வாழ்க்கையில் சிரமங்களைத் தரும். குறிப்பாக அதிகம் பயணிக்க வேண்டிய வேலையில் இருப்பவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணைக்கு நேரம் கொடுக்க முடியாமல் போகலாம், இதனால் பெரும் சிக்கலை எதிர்கொள்ளக்கூடும். இதை தவிர்க்கவும். காதல் ஜோடிகளுக்கு போதிய நேரம் கொடுக்காததால் பிரேக்அப் ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்களுடன் பொறுமையுடன் நடந்துகொள்ளுங்கள். அமைதியையும் புரிதலையும் காட்ட வேண்டிய நேரம் இது. மனக் கசப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், பேச்சில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News