ராசிபலன் ஜூலை 8, 2023: இந்த ராசிகளுக்கு மனமகிழ்ச்சி, திடீர் பண வரவு

Daily Horoscope July 8, 2023: இன்றைய தினம் அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கின்றது? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 8, 2023, 05:39 AM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதி நிலவும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • புதிய பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
ராசிபலன் ஜூலை 8, 2023: இந்த ராசிகளுக்கு மனமகிழ்ச்சி, திடீர் பண வரவு title=

தினப்பலன், ஜூலை 8, 2023: கிரக மாற்றங்கள் மற்றும் பிற ஜோதிட அம்சங்களின் அடிப்படையில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் அன்றைய பலன்கள் அமைகின்றன.  இன்றைய தினம் அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கின்றது? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? இந்த பதில் தெரிந்துகொள்ளாலாம். 

மேஷம் 
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். 

ரிஷபம் 
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். 

மிதுனம் 
மிதுன ராசிக்காரர்கள் இன்று குடும்பத்தில் பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வண்டி வாகனங்கள் பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுத்த காரியம் வெற்றி அடைய மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். 

கடகம் 
இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 2.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். மன அமைதி உண்டாகும். 

சிம்மம் 
இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 2.58 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தவிர்ப்பது உத்தமம். 

கன்னி 
இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். வேலையில் பணிசுமை குறையும். 

துலாம் 
துலா ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.  

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இன்று முதன் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை... தலைவிதி மாறும் 

விருச்சிகம் 
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். 

தனுசு 
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். சிறப்பான வருமானத்தால் மகிழ்ச்சி ஏற்படும். 

மகரம் 
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலப்பலன் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். 

கும்பம் 
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். 

மீனம் 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்கள் ஆகஸ்ட் 7 வரை பண மழை கொட்டும், தொழிலில் லாபம் கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News