இன்றைய ராசிபலன் : இன்று இவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்...!

தினசரி ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு ஏப். 20ஆம் தேதி சனிக்கிழமையான இன்றைய கிரகநிலைகளை பொருத்து பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் முழுமையாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 20, 2024, 06:29 AM IST
  • இன்று சிலருக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.
  • குடும்ப உறுப்பினர்களுடன் சிலருக்கு பிரச்னை வரலாம்.
  • நீண்ட கால வழக்குகளுக்கு சிலருக்கு தீர்வு கிடைக்கலாம்.
இன்றைய ராசிபலன் : இன்று இவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்...! title=

தினசரி ராசிபலன் : ஏப். 20ஆம் தேதி சனிக்கிழமையான இன்று தமிழ்நாட்டில் அனைவருக்கும் விடுமுறை நாளாகும். இன்றைய நாளை தொடங்கும் முன் உங்கள் ராசிக்கான பலன்களை அறிந்துகொள்வதன் மூலம் நாள் சிறப்பானதாக அமையும். அந்த வகையில், இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் இன்றைய ராசிபலன்களை காணலாம். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அளவில்லா மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம், நீங்கள் உங்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை முதலீடு செய்வதை தவரிக்கவும். இருப்பினும் இன்று உங்களுக்கு நல்ல நாள்தான். மாலை நேரத்தை பெற்றோருக்கு உபயோகமாக செலவிடுவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களான மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி கடின உழைப்பை போட வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு வெற்றிக் கனி கிட்டும். குறிப்பாக, இன்று நீங்கள் பல விஷயங்களுக்கு போராட வேண்டியிருக்கும். ஏதேனும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால் அதனை பொறுமையாக கையாளவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களான நீங்கள் தொடர்ந்த வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும்பட்சத்தில், அதில் உங்களுக்கு வெற்றி உறுதியாகலாம். பணியிடத்தில் உங்களின் முழு திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும், இதனால் உங்களின் மேல் அதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று நீங்கள் உங்களின் குழந்தை பருவ நண்பர்களில் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் நீங்கள் அளவில்லா மகிழ்ச்சியை அடைவீர்கள், குறிப்பாக நாள் முழுவதும் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம் மழை கொட்ட ஆரம்பிக்கும்

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாளில் உங்களுக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கும். குறிப்பாக, உங்களின் நுண்ணறிவும் புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் எதிரிகளை வீழ்த்திவிடுவீர்கள், இது உங்களுக்கு மன மகிழ்ச்சியை தரும். 

துலாம்

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று சில பருவகால நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. எனவே சற்று எச்சரிக்கையாக இருக்கவும். அதுமட்டுமின்றி இன்றைய தினம் சில சிக்கல்கள் நிறைந்த நாளாக உங்களுக்கு இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களில் இல்லற வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் இணையர் சொல்வதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவரின் அறிவுரையை ஏற்று நடக்க வேண்டும். இதனை மீறினால் பிரச்னை உண்டாகலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களாகிய நீங்கள் இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இதனால் நீங்கள் தன்னார்வமாக பல வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்வீர்கள். இதன்மூலம், தேவையற்ற வேலைகளில் உங்களின் ஆற்றலை வீணடிக்க நேரிடும். தொடர்ந்து, மற்ற வேலைகளில் தாமதம் ஏற்படலாம். 

மகரம்

மகர ராசிக்காரர்களாகிய உங்களின் குடும்பச் சூழலும், பணிச் சூழலும் இனிமையானதாக இருக்கும். உங்கள் குழந்தைகள் மூலம் எதிர்பார்க்காத பரிசுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. சினிமா, கிரிக்கெட் ஆகிய பொழுதுபோக்குகளுக்கு நீங்கள் இன்று கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று சுமாரான நாளாகதான் இருக்கும். இருப்பினும் குடும்பத்தில் நீடிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அலுவலகப் பணி சார்ந்த நபர்களுக்கு குடும்பத்தில் மேலும் பிரச்னைகள் ஏற்படலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களாகிய நீங்கள் நண்பர்களுடன் பார்ட்டி செய்து உற்சாகமாக இருப்பீர்கள். ஆனால் அதன்பின் உடல்நலப் பிரச்னைகள் உண்டாகலாம். எனவே பார்ட்டியில் கவனமாக இருக்கவும். இன்றைய நாள் உங்களுக்கு இன்பமாகவும், துன்பமாகவும் இருக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இதில் கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்கள், கணிப்புகள் ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை என்பதை கவனத்தில் கொள்க. இது பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் போன்றவை மூலம் சேகரிக்கப்பட்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் இந்த தகவலை உங்களுக்கு வழங்குவது மட்டுமே. Zee News இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | Astro: செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் குபேரரின் அருள் பெற்ற ‘3’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News