சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை.. அருள் மழை பொழிவார் அன்னை லட்சுமி

Sukran Peyarchi Palangal:  சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 12 ராசிகளில் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களும் சில ராசிகளுக்கு பாதகமான பலன்களும் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 3, 2023, 03:14 PM IST
  • ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன்.
  • சுக்கிரனின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது.
  • இவர்கள் வாழ்வில் அன்பின் பிரவேசம் இருக்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை.. அருள் மழை பொழிவார் அன்னை லட்சுமி title=

சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், சுக்கிரன் ஒரு நல்ல கிரகமாக கருதப்படுகிறார். ஏனெனில் சுக்கிரன் செல்வம், பெருமை, ஆடம்பரம் மற்றும் அன்பின் காரணி கிரகமாக உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால், அந்த நபர் ராஜவாழ்க்கை வாழ்வார், பல வித ஆடம்பரங்களை அனுபவிப்பார். 

தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் இருக்கிறார். அக்டோபர் 2, 2023 அன்று, சுக்கிரன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆனார். சுக்கிரன் 3 நவம்பர் 2023 அன்று சிம்ம ராசியை விட்டு கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 12 ராசிகளில் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களும் சில ராசிகளுக்கு பாதகமான பலன்களும் கிடைக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். சுக்கிரன் இவர்களுக்கு அபரிமிதமான செல்வத்தையும், செழிப்பையும், ஆடம்பரமான வாழ்க்கையையும் தருவார். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சியால் நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகள் இவைதான்

ரிஷப ராசி (Taurus)

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் பெயர்ச்சி (Venus Transit) இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது. இவர்கள் வாழ்வில் அன்பின் பிரவேசம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவார்கள். குடும்பத்தில் உள்ள அனைவருடனும் மிகவும் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். அன்னை லக்ஷ்மியின் அருளால், உங்களுக்கு அதிக பணம் கிடைக்கும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும்.

சிம்ம ராசி (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பல வித நன்மைகளைத் தரும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். இது முதலீட்டிற்கு ஏற்ற நேரமாக இருக்கும். முதலீடு செய்து சேமிப்பீர்கள். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் - வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாகவும் இணக்கமாகவும் வாழ்வீர்கள்.

விருச்சிக ராசி (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் வாழ்க்கையில் புதிய தொடக்கத்தைத் தரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். காதல் விவகாரங்கள் வலுவடையும். திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும். நிலுவையில் உள்ள பணம் கிடைத்து பெரும் நிம்மதி அடைவீர்கள். வணிகத்திற்கு மிகவும் சாதகமான நேரமாக இது இருக்கும்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

தனுசு ராசி (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். அன்னை லட்சுமி தனுசு ராசிக்கார்ரகளின் மீது தன் அருள் மழையை பொழிவார். எதிர்பாராத இடங்களில் இருந்து திடீர் பண வரவு இருக்கும். வீடு, கார் அல்லது வேறு ஏதேனும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கலாம்.

மகர ராசி (Capricorn)

சுக்கிரன் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்கள் காதல் துணையை நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் யோகம் இப்போது அமையும். வாழ்க்கையில் தனியாக இருப்பவர்களுக்கு துணை கிடைக்கும். சில மத வழிபாட்டு இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை பெறுவீர்கள். அன்னை லட்சுமி உங்களுக்கு செல்வத்தையும் செழிப்பையும் தருவார்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது லட்சுமி கடாக்ஷம்... ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News