குரு பெயர்ச்சி 2023: 5 ராசிகள் மீது குரு பார்வை, வெற்றி மழை பொழியும், செல்வம் பெருகும்

Guru Gochar in April: கிரகங்களின் சஞ்சாரம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 1, 2023, 03:54 PM IST
  • மிதுன ராசியில் ராகு, சூரியன், புதன், வியாழன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கும்.
  • இந்த காலத்தில் பலருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • இதனுடன், இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.
குரு பெயர்ச்சி 2023: 5 ராசிகள் மீது குரு பார்வை, வெற்றி மழை பொழியும், செல்வம் பெருகும்  title=

குரு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும். ஒரு கிரகம் மாறும்போதெல்லாம், மற்ற கிரகங்களுடன் அதன் இணைவு பல ராசிகளை பாதிக்கிறது. சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் ஜனவரி 17ல் நுழைந்து தற்போது அதே ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார். அவர் மார்ச் மாதம் 6 ஆம் தேதி உதயமாகவுள்ளார். நிழல் கிரகமான ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் உள்ளனர். மேலும் ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்க உள்ளார்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, இப்படிப்பட்ட சூழ்நிலையில் கஜலட்சுமி யோகம் உருவாகிறது. இதனுடன் சூரியனும் வியாழனும் இணைவதால் நவம-பஞ்சம் யோகமும், புதன், சூரியன் இணைவதால் புதாதித்ய யோகமும் உருவாகி வருகிறது. பல கிரகங்களின் இயக்கம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரகங்களின் சஞ்சாரம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்

ஜோதிட சாஸ்திரப்படி, குரு மேஷ ராசியில் கோச்சாரம் செய்வது இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும். இந்த காலத்தில் ராசிக்கு முதல் வீட்டில் ராகு, சூரியன், குரு, புதன் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த அரிய சேர்க்கை இந்த ராசிக்காரர்களை செல்வந்தர்களாக மாற்றும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இதனுடன், பணியிடத்தில் உங்கள் வேலையைப் பார்த்து, பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கொடுக்க வாய்ப்புகள் உள்ளன. 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன் 2023, இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

மிதுனம்

மிதுன ராசியில் ராகு, சூரியன், புதன், வியாழன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கும். இந்த ராசிக்கு 11ம் வீட்டில் இந்தக் கூட்டணி நடக்கப் போகிறது. இதுமட்டுமின்றி இந்த காலத்தில் பலருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இதனுடன், இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். பண லாபம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வது நல்லது. எங்காவது சுற்றுலா செல்லலாம். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட வேலைகள் இந்தக் காலத்தில் வெற்றிகரமாக நடந்து முடியும்.

மகரம்

ஜோதிட சாஸ்திரப்படி இந்த யோகம் நான்காம் இடமான மகர ராசியில் அமையப் போகிறது. இத்தகைய சூழ்நிலையில், மகர ராசிக்காரர்கள் பணபலமும், மன வலிமையும் பெறுவார்கள். வாகனம், நிலம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உருவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி

இந்த கிரகங்களின் சேர்க்கை சிம்மத்தின் ஒன்பதாம் வீட்டில் நடக்கப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு துறையிலும் வெற்றியுடன், நீங்கள் முன்னேற்றத்தையும் அடைவீர்கள். இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்

ஜோதிடத்தின் படி, இந்த கிரகங்களின் கூட்டணி மீனத்தின் இரண்டாம் வீட்டில் உருவாகப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், மீன ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழிலில் பல புதிய முடிவுகளை எடுப்பீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராகு சுக்கிரன் சேர்க்கை: இந்த ராசிகளுக்கு பண நஷ்டம், வாழ்க்கையில் பிரச்சனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News