அக்டோபரில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்!!

Mars Transit: செவ்வாயின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நல்ல பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 23, 2022, 04:50 PM IST
  • மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமான பலன்களைக் கொண்டு வந்துள்ளது.
  • இந்த நேரத்தில், முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் முதலீடு செய்யலாம்.
  • இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் வரும்.
அக்டோபரில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்!!  title=

செவ்வாய் பெயர்ச்சி 2022, ராசிகளில் அதன் தாக்கம்: சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகம் சிவப்பு கிரகமாக கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகவும், வலிமை மற்றும் ஆற்றலின் காரணியாகவும் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ஒரு நபரின் ஜாதகத்தில் எந்த வீட்டில் செவ்வாய் கிரகம் அமைகிறதோ, அந்த நபரின் மீது செவ்வாயின் தாக்கமும் அந்த ஸ்தானத்திற்கு ஏற்றார்போல் இருக்கும்.

ஜோதிடத்தின் கணக்கீடுகளின்படி, கிரகங்களின் தளபதியான செவ்வாய், அக்டோபர் 16, 2022 அன்று மதியம் 12:4 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மாறி மிதுன ராசியில் நுழைகிறார். மிதுன ராசியில் செவ்வாயின் சஞ்சாரத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சிலருக்கு இந்த மாற்றம் சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். எனினும் செவ்வாயின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நல்ல பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்

மேஷம்: 

மேஷ ராசியின் எட்டாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் என்பதால் மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமான பலன்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த நேரத்தில், முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் வரும். பண அபிவிருத்திக்கான நேரம் இது. வியாபாரம் செய்வதற்கும் இது ஏற்ற நேரமாக இருக்கும். நீங்கள் புதிய தொழில் செய்ய நினைத்தால், இந்த நேரத்தில் தொடங்குவது சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | தீபாவளி முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம்: குபேரரும், சனியும் சேர்ந்து அருள் புரிவார்கள் 

சிம்மம்: 

மிதுன ராசியில் செவ்வாயின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு முதலீட்டில் லாபத்தை அள்ளித்தரும். இந்த காலகட்டத்தில் அலுவலக பணிகளில் இருப்பவர்களின் சம்பளம் உயரும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.

கன்னி: 

உத்யோகத்தில் உள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாகும். இவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கும் இது லாபகரமான நேரமாக இருக்கும். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.

மகரம்: 

மகர ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சுபமாக இருக்கும். விளையாட்டுப் போட்டி மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். மகர ராசிக்காரர்களின் உடல்நிலை நன்றாக இருக்கும்.

மீனம்: 

மீன ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும். இது அவர்களின் நிதி சிக்கல்களை நீக்கும். தொழில், வியாபாரம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் / மனைவி, குழந்தைகள் இடையிலான அன்பு அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 59 ஆண்டுகளுக்கு பிறகு நாளை அற்புத கலவை, 5 ராசிகளின் கதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News