நவம்பரில் சுக்கிரனின் ராசி மாற்றம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், மகிழ்ச்சி பெருகும்

Venus Transit: விருச்சிக ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். சுக்கிரனின் அருளால் இவர்களுக்கு வருமானம் பெருகும், வாழ்வில் மகிழ்ச்சியும், ஆடம்பரமும் பெருகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 1, 2022, 05:42 PM IST
  • சுக்கிரனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு பெரிய பலன்களை அள்ளித் தரும்.
  • எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
நவம்பரில் சுக்கிரனின் ராசி மாற்றம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், மகிழ்ச்சி பெருகும் title=

சுக்கிரன் பெயர்ச்சி நவம்பர் 2022: வேத ஜோதிடத்தின்படி, நவம்பர் 11 அன்று சுக்கிரன் கிரகம் ராசியை மாற்றுகிறது. சுக்கிரன் தனது ராசியை மாற்றி விருச்சிக ராசிக்குள் நுழையும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, அழகு, அன்பு மற்றும் காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. சுக்கிரன் தற்போது துலாம் ராசியில் உள்ளது. பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். விருச்சிக ராசியின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். எனினும், விருச்சிக ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். சுக்கிரனின் அருளால் இவர்களுக்கு வருமானம் பெருகும், வாழ்வில் மகிழ்ச்சியும், ஆடம்பரமும் பெருகும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சிம்மம்: 

சுக்கிரனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பெரிய பலன்களைத் தரும். சுக்கிரன் ராசி மாறியவுடன் இவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும். இந்த காலத்தில் புதிய வேலையைத் தொடங்கலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அனைத்து விதங்களிலும் லாபம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதால் நிதி நிலை நன்றாக இருக்கும்.

துலாம்: 

சுக்கிரனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு பெரிய பலன்களை அள்ளித் தரும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடு செய்ய இது நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் பெறலாம். இந்த மாதம் சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.

மேலும் படிக்க | நவம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகள் மீது மாதம் முழுதும் பண மழை, லாபம் பெருகும்

தனுசு: 

சுக்கிரனின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இந்த நேரம் தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வாழ்வில் வசதிகள் பெருகும். காதல், திருமண வாழ்க்கைக்கு இது நல்ல நேரமாக இருக்கும்.

மகரம்:

சுக்கிரனின் ராசி மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். சம்பளம் கூடும். பதவி உயர்வு பெறலாம். மரியாதை அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். நிதி நிலைமைகள் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கும்ப ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பெரிய சாதனைகளை அடைய முடியும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்திற்கும் இது நல்ல நேரமாக இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | திருமணத் தடையா? ராகு தோஷமா? ஏழில் ராகுவா? ராகு தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News